சாக நினைத்து.. சினிமாவை விட்டு பயந்து ஓடிய சேது அபிதாவின் கண்ணீர் கதை!

சென்னை: பாலா இயக்கிய சேது படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய அபிதாவை நாம் அவ்வளவு சீக்கியம் மறந்துவிட முடியாது. முதல் படத்திலேயே திறமையான நடிகை என பெயர் எடுத்த அபிதா, ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என ஓடியதற்கு என்ன காரணம், செத்துவிடலாமா என நினைத்து பயந்ததற்கு என்ன காரணம் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நடிகை அபிதா 1985 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் ஜெனிலா, இவர் ஒரு மலையாளி. சிறுவயதில் அபிதா, சீரியல் ஒன்றின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அதை வேடிக்கை பார்க்க சென்றிருக்கிறார். அப்போது இயக்குனர் ஒருவர் அபிதாவை பார்த்துவிட்டு, நீ இந்த சீரியலில் நடிக்கிறியா என்று கேட்டுள்ளார். அதன் பிறகு தான் அம்மாவை அழைத்துவந்து அந்த இயக்குநருடன் பேசி, சீரியலில் நடித்த தொடங்கி இருக்கிறார் அபிதா.

Sethu abitha Story
Photo Credit:

நடிகை அபிதா: கிரிமனல், ஜன்மம் எக்ஸ், மானசா போன்ற சீரியலில் கல்லூரி மாணவி, தங்கை போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் அபிதா. அதன்பின் சினிமாவில் கோல்மால், வீரபாண்டிய கோட்டை, எட்டுப்பட்டி ராசா போன்ற படத்தில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த அபிதா, பாலா இயக்குநராக அறிமுகமான சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாலா தான் ஜெனிலா என்கிற பெயரை அபிதா என மாற்றி உள்ளார். சேது படத்தில் பல காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு பாலாவிடம் பல திட்டுகளை வாங்கி நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மொத்த செட் முன்பும் பாலா திட்ட இதற்கு மேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என கதறி அழுது அங்கிருந்து சென்று இருக்கிறார் அபிதா. ஆனால், அதன்பின் அம்மா கொடுத்த அட்வைசால் மீண்டும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அபிதா பட்ட கஷ்டத்திற்கு பலனாக படம் வெளியாகி அபிதாவிற்கு நல்ல பெயரும், பாராட்டும் கிடைத்தது.

சாக நினைத்தேன்: இதையடுத்து, சீறிவரும் காளை, உணர்ச்சிகள், அரசாட்சி, நம்நாடு என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்த கிசுகிசுவால் மிகவும் மனவேதனைக்கு உள்ளானார்.. ராமராஜனுடன் சீறிவரும் காளை படத்தில் நடித்த போது தான், ராமராஜனுக்கும் நளினிக்கும் விவாகரத்து நடந்துள்ளது. இதற்கு காரணம் அபிதா தான் என பல பத்திரிக்கைகளில் கிசுகிசுக்கள் வெளிவந்தன. அதோடு மட்டுமில்லாமல், ஒரு பத்திரிகை நிறுவனம், உன்னை பற்றி இப்படி செய்தி வெளிட போகிறோம், அப்படி அந்த செய்தி வெளியில் வரக்கூடாது என்றால், 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அபிதா, பணத்தைக் கொடுக்காததால், "சேது அபிதா ஆடை அவிழ்க்க தயார்" என்ற தலைப்பில் போஸ்டர்கள் வெளியாகி செய்தி வெளியிட்டது. இதனால், மனம் உடைந்து போன அபிதா, மன உளைச்சலுக்கு ஆளாகி இனி சினிமாவே வேண்டாம் என பயந்து ஓடியது மட்டுமில்லாமல் செத்துவிடலாம் என்றும் யோசித்து சில காலம் சினிமா பக்கமே தலைகாட்டவில்லை.

திருமதி செல்வம்: இதையடுத்து, தான் சன் டிவியில் 2007 முதல் 2013 வரை ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் பிரபலமானார். அந்த சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே, சுனில் என்பரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் பொன்னூஞ்சல், தங்கமான புருஷன் போன்ற தொடர்களில் நடித்து வந்த அபிதாவிற்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததால், சின்னத்திரையை விட்டு விலகினார். அதன் பின் நீண்ட ஆண்டுகள் கழித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி சீரியலில் நடித்தார். தற்போது சின்னஞ்சிறு கிளியே தொடரில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: sethu abitha story அபிதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X