ஜவான் படத்தில் விஜய் கேமியோ ரோல்.. சென்னையில் போடப்படும் பிரம்மாண்ட செட்!
சென்னை : நடிகர் விஜய் தற்போது தனது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வாரிசு படம்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு தற்போது வம்சி படிப்பள்ளி இயக்க்ததில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தளபதி 66 என்று பெயரிடப்ப்ட்டிந்த இந்தப் படத்தின் டைட்டில் கடந்த மாதம் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப சென்டிமெண்டை மையமாக வைத்து விஜய்யின் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

நட்சத்திர பட்டாளம்
படத்தில் விஜய்க்கு ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் படத்தில் பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்துள்ளனர். அதிகமான நட்சத்திரங்கள் நடித்துவரும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

டைட்டில் சாங்
படத்தின் டைட்டில் சாங் விரைவில் வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. படத்தில் ஒன்றிரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்களை தமன் முடித்து விட்டதாகவும், இதில் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் செம்மயான டைட்டில் சாங் உருவாகியுள்ளதாகவும் விரைவில் அந்தப் பாடல் வெளியாகவுள்ளதாகவும் முன்னதாக தமன் கூறியிருந்தார்.

ஜவான் படத்தில் கேமியோ ரோல்
இதனிடையே அட்லியின் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அட்லியுடனான நட்பு காரணமாக இந்தப் படத்தில் சம்பளம் இல்லாமல் விஜய் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் ஏற்கனவே 60 சதவிகிதத்திற்கும் மேல் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை வேடங்களில் ஷாருக்
முன்னதாக திருமணம், ஹனிமூனை முடித்துக் கொண்டு கடந்த வாரங்களில் நயன்தாரா இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். நயன்தாரா -ஷாருக்கான் காம்பினேஷன் காட்சிகளை தற்போது அட்லி படமாக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஷாருக் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.

விஜய்க்காக போடப்படும் செட்
இந்நிலையில இந்தப் படத்தில் விஜய் நடிக்கும் காட்சிகளுக்காக சென்னையில் தற்போது பிரம்மாண்டமான அளவில் செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் சென்னையில் விஜய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் ஜவான் படக்குழு தெரிவித்துள்ளது. எது எப்படியோ தமிழில் மட்டுமே கவனம் செலுத்திவந்த விஜய் தற்போது பாலிவுட்டிலும் நடிப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











