ரிலீஸாக வரிசை கட்டி நிற்கும் படங்கள்… வசூலை வாரித் தருமா?
சென்னை : நாளை ஆறு முதல் ஏழு படங்கள் ரிலீசாக உள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. மேலும் , சிறு பட்ஜெட் படங்களும் வரிசைக்கட்டிக் கொண்டு நிற்பதால் திரைப்பட ரசிகர்கள் ஏகத்திற்கும் குஷியாக உள்ளனர்.
2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. அதிலும் டிசம்பர் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சுமார் பத்து , பன்னிரண்டு படங்கள் வரிசைக்கட்டி ரிலீஸ் ஆகயுள்ளது. ஆண்டு கடைசி என்பதாலும் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளியாகாததாலும், சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் வெளியாகி வருகின்றன.

வழக்கமாக வெள்ளிக்கிழமை என்றால் ஒன்று இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகும். ஆனால், நாளை ஆறு முதல் ஏழு படங்கள் வெளியாவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. அதிலும் சிவகார்த்திகேயனின் ஹீரோ மற்றும் கார்த்தியின் தம்பி படம் யாருக்கு அதிக தியேட்டர்கள் என்று போட்டியே நிலவுகிறது.
கார்த்தி கைதி படத்தின் வெற்றி தம்பி படத்திற்கு கை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும் சிவகார்த்திகேயன் படத்திற்கு ரசிகர்கள் அதிகம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அவரின் காமெடி மற்றும் நடிப்பு 'நம்ம வீட்டுபிள்ளை' படம் நன்றாக ஓடியதால் இப்படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆன சல்மான் கானின் தபாங் படத்தின் மூன்றாவது பாகமும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கும் போட்டி நிலவுகிறது. இப்படத்தின் முதல் பாகம் தமிழில் ஒஸ்தி என்று ரீமேக் செய்து சிம்பு நடித்தார். சிறிய பட்ஜெட் படங்களான பரமு, கைய்ல மற்றும் விருது போன்ற படங்களும் வரிசையில் நிற்கின்றன.
ஒரே நாளில் இவ்வளவு படங்கள் ரிலீஸ் ஆகிறது. இதை ரசிக்க திரைப்பட ரசிகர்கள் குஷியில் உள்ளனர். தயாரிப்பாளர்கள் போதுமான திரையரங்குகளில் படத்தை திரையிட வேண்டும் என்று விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பொறுத்துதிருந்து பார்போம் ஜெயிப்பது ஹீரோவா ? அல்ல தம்பியா ?


Click it and Unblock the Notifications











