Vijay: 1 முதல் 69 வரை விஜய்யின் அதிரடி திரைப்பயணம்.. வீடியோ வெளியிட்ட லியோ பட தயாரிப்பு நிறுவனம்!
சென்னை: நடிகர் விஜய் நாளைய தினம் தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த பிறந்த நாளில் மற்றொரு சிறப்பு அவர் அரசியல் என்ட்ரி கொடுத்தவுடன் வரும் முதல் பிறந்தநாள் இது. இந்த பிறந்த நாளை மிகச் சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் மிகப்பெரிய அளவில் திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பலரும் உயிரிழந்ததை தொடர்ந்து தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தற்போது முடங்கியுள்ளன. ஆயினும் அவரது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 2வது பாடல் நாளைய தினம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்: நாளைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக விஜய் ரசிகர்களுக்கு அமைந்துள்ளது. நாளைய தினம் அவரது பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் இந்த நாள் மிகவும் சிறப்பானதாக அவர்களுக்கு அமைந்துள்ளது. நாளைய தினம் விஜய் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதே போல அவர் அரசியல் என்ட்ரி கொடுத்தவுடன் வரும் முதல் பிறந்த நாளாகவும் நாளைய தினம் அமைந்துள்ளது. இந்த நாளில் பல்வேறு கொண்டாட்டங்களை மேற்கொள்ள விஜய் மற்றும் அவரது அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் திட்டமிட்டு இருந்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டங்கள் கேன்சல்: ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கள்ளக்குறிச்சியில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை நேரடியாக சென்று மேற்கொள்ளவும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் நாளைய தினம் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் அவரது பிறந்தநாளை அவர் தற்போது நடித்து வரும் படத்தின் டீம் கொண்டாட மிகவும் விருப்பத்துடன் உள்ளது.
2வது சிங்கிள்: தற்போது ஏஜிஎஸ் நிறுவனத்தின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நாளைய தினம் விஜய் பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாளை மாலை இந்தப் பாடல் வெளியாகவுள்ள நிலையில் தற்போது இதன் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. முதல் பாடல் அதிரடியாக வெளியான நிலையில் தற்போது 2வது பாடல் மெலடி சாங்காக வெளியாக உள்ளது. இதன் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
விஜய் -பவதாரணி பாடல்: இந்த பாடலை நடிகர் விஜய் மற்றும் சமீபத்தில் மறைந்த பாடகி பவதாரணி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலில் பவதாரணியின் வாய்சை ஏஐ தொழில்நுட்பம் மூலம் யுவன் சங்கர் ராஜா பயன்படுத்தி உள்ளார். இதனால் இந்த பாடல் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தற்போது பாடலின் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ள சூழலில் நாளைய தினம் வெளியாக உள்ள இதன் லிரிக் வீடியோவிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆயினும் இந்தப் பாடல் மெலடியாக வெளியாவதால் ரசிகர்கள் சிறிது ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
விஜய் பிறந்தநாள் கான்செப்ட் வீடியோ: இந்நிலையில் நாளைய தினம் விஜய் பிறந்தநாளையொட்டி இன்று அவரது திரைப்பயணத்தின் கான்செப்ட் வீடியோவை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. முன்னதாக விஜய்யின் லியோ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள இந்த நிறுவனம் விஜய்யின் பிறந்தநாளை மறக்காமல் வீடியோ வெளியிட்டுள்ளது. கடிகாரத்தை காட்டுவது போல இந்த வீடியோவில் அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் நம்பரில் நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் காலடி எடுத்து வைப்பதாக காட்டப்பட்டு தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து தன்னுடைய பயணத்தை ஓட்டமாக மாற்றியது குறித்தும் இந்த வீடியோவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் இருக்கைக்கான பயணம்: இந்நிலையில் அடுத்ததாக அவர் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளது குறித்தும் சுட்டிக்காட்டும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. தொடர்ந்து அவர் முதல்வர் இருக்கையை நோக்கி நகர்வதாகவும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட அவரது ரசிகர்கள் காத்திருக்கும் சூழலில் இந்த வீடியோ அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. முன்னதாக விஜய் பிறந்தநாளையொட்டி காமன் டிபியையும் ரசிகர்கள் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











