Serial actor Arnav : மண்ணள்ளி போட்டு சாபம்விட்டா.. கண்கலங்கி சீரியல் நடிகர் அர்னவ் பேட்டி!
சென்னை : சீரியல் நடிகர் அர்னவ் தனது குழந்தை குறித்து கண்கலங்கி பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.
கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமான அர்னவை தன்னுடன் இணைந்து நடித்த திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான ஒரு சில மாதத்திலேயே இருவருக்கும் பிரச்சனை உருவானது.

நடிகை திவ்யா ஸ்ரீதர் : இதையடுத்து, நடிகை திவ்யா ஸ்ரீதர், கணவர் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் அர்னவ் மீது அடுக்கடுக்கான புகாரை கூறினார்.அதன் பின், திவ்யா கூறிய குற்றச்சாட்டின் பேரில், அர்னவை போலீசார் கைது செய்து 15 நாள் புழல் சிறையில் அடைத்தனர்.
அழகான பெண் குழந்தை : நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு கடந்த மாதம் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையின் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார். திவ்யாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், ரசிகர்கள் பலரும் ஈகோவை தூக்கிப்போட்டுவிட்டு பாபாவை பாருங்க என்றும் அர்னவிற்கு ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்தனர்.
மூட்டை தூக்கியாவது காப்பாற்றுவேன் : இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அர்னவ், இணையத்தில் பலரும் அப்பா, அம்மா இருந்தும் குழந்தை அனாதையா வளரனுமா என்று கேட்கிறார்கள். இந்த உலகத்தில் யாரும் அனாதை இல்லை என் மகளுக்கு அப்பாவாக நான் இருக்கிறேன், எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் கூடநான், மூட்டை தூக்கியாவது என் மகளை காப்பாத்துவேன்.

நான்கேட்க மாட்டேன் : மேலும், குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையாகத்தான் இருக்கிறது., ஆனால், நானோ, என் குடும்பத்தில் இருப்பவர்களோ யாரும் குழந்தையை பார்க்க வேண்டும், காமி என்று கேட்கமாட்டோம். அவங்க சைடில் இருந்து வீடியோ கால் மூலமாக குழந்தையை காட்டினாலும் ஒகே தான்.
சாபம் விட்டாள் : தொடர்ந்து பேசிய அர்னவ், திருமணமான புதிதில் அனைவரின் குடும்பத்தில் நடக்கும் வழக்கமான சண்டை தான் என்று தான் நான் நினைத்தேன், இதை அவர் பெரிய விஷயமாக்கிவிட்டார். மண்ணள்ளி போட்டு சாபம்விட்டா, குடும்பமே அழிஞ்சிபோய்டும் என்று எல்லாம் பேசி இருக்கிறார். கிட்டத்தட்ட 42 நாள் என்னை ரூமில் தூங்கவிடாமல் டார்ச்சர் செய்தார். இதற்காக நான் தான் முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருக்கனும் என்று கண்கலங்கி பேசினார் நடிகர் அர்னவ்.


Click it and Unblock the Notifications