பிரசவத்திற்கு 10 நாள் தான் இருக்கு.. உதவிக்கு கூட யாரும் இல்லை.. திவ்யா ஸ்ரீதர் கண்ணீர் பேட்டி!
சென்னை : பிரசவத்திற்கு இன்னும் 10 நாள் தான் இருக்கு, உதவிக்கு கூட யாரும் இல்லை என்று சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர், கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது, தன்னுடன் இணைந்து நடித்த அர்ணவ்வை காதலித்து வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு மேல் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமண போட்டோவை திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார்.

வேறு நடிகையுடன் தொடர்பு
இதையடுத்து நடிகை திவ்யா, கணவர் அர்ணவ் கர்ப்பிணியாக இருக்கும் என்னை அடித்து டார்ச்சர் செய்ததாகவும், செல்லம்மாள் சீரியலில் நடிக்கும் நடிகையுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். இதை கேள்வி கேட்டதால், கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தன்னை அடித்துவிட்டதாக கதறி அழுதபடி புகார் கூறியிருந்தார்.

ஜாமீனில் விடுதலை
நடிகை திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ணவ் மீது கொலை மிரட்டல் வன்புணர்வு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அர்ணவை போலீசார் கைது செய்து 15 நாட்கள் புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு ஜாமீனில் வந்த அர்ணவ் தொடர்ந்து செல்லம்மாள் சீரியலில் நடித்து வருகிறார்.

பழிவாங்கி விட்டாள்
சிறையில் இருந்து வெளியே வந்த அர்ணவ், தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், பழிவாங்க வேண்டும் என்பதற்காக தன் மீது திவ்யா இப்படி ஒரு பழியை சுமத்தியிருக்கிறார் என்றும், என்னை நன்றாக பழிவாங்கி விட்டாள், இனிமேலாவது அவள் சந்தோஷமா இருக்கட்டும் என்று வீடியோவில் கூறியிருந்தார்.

வளைகாப்பு
அதன் பின் கர்ப்பிணியான திவ்யா ஸ்ரீதருக்கு செவ்வந்தி சீரியலில் நடித்து வரும் முன்னணி நடிகைகள் வளைகாப்பு செய்து அழகுப்பார்த்தனர். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் திவ்யா ஸ்ரீதர் தற்போது செவ்வந்தி சீரியலில் பிரேக்கே இல்லாமல் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கண்ணீருடன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

பணத்தேவை உள்ளது
எனக்கும் அர்ணவ்விற்கும் பிரச்சனை ஏற்பட்டபோது, பலரும் இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினார்கள். கடவுள் கொடுத்த குழந்தையை நான் அழிக்க விரும்பவில்லை. பிரசவம் மற்றும் பல தேவைகளுக்காக எனக்கு பணத் தேவை உள்ளதால், பிரேக்கே எடுக்காமல் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருக்கிறேன்.

பத்து நாளில் டெலிவரி
இன்னும் பத்து நாளில் டெலிவரி ஆகிவிடும் என்று மருத்துவர்கள் தேதி கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது உதவிக்கு கூட யாரும் இல்லை. எனக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால், பிறப்பது ஆண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவனுக்கு பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்ற நல்ல பண்புகளை சொல்லி வளர்ப்பேன் என்று பேட்டியில் நடிகை திவ்யா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











