என் வாழ்க்கையே இருண்டு போச்சு.. கடவுள் தண்டனை கொடுப்பார்.. திவ்யா ஸ்ரீதர் கண்ணீர் பேட்டி!

சென்னை: கேளடி கண்மணி சீரியலில் திவ்யா, அர்ணவ் இருவரும் இணைந்து நடித்த போது, காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின் அர்ணவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாக திவ்யா புகார் கூறியிருந்தார். திவ்யா, அர்ணவை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தற்போது, அர்ணவ் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், நடிகை திவ்யா ஸ்ரீதர் பல விஷயத்தை மனம் திறந்து பேசி உள்ளார்.

கேளடி கண்மணி சீரியலில் அர்ணவ் ஹீரோவாக நடித்த போது, அந்த சீரியலில் நாயகியாக நடித்த திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த பின்னரே திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம், இந்து முறைப்படியும், முஸ்லிம் முறைப்படியும் நடந்தது.

divya sridhar arnav interview

திவ்யா ஸ்ரீதர்: திருமணத்திற்கு பின் திவ்யா கர்ப்பமான நிலையில், திருமண புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட, அதை நீக்க வேண்டும் என கூறி அர்ணவ் சண்டை போட்டு, திவ்யா ஸ்ரீதரை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். மேலும் 'செல்லம்மா' சீரியல் நடிகை அன்ஷிதாவுடன் அர்ணவுக்கு தொடர்பு இருந்தது திவ்யாவுக்கு தெரியவந்தது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது. இவர்கள் இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாணையில் உள்ளது. அர்ணவ் பிக் பாஸ் வீட்டுக்கு சென்றதால், திவ்யா ஸ்ரீதரும் பிக் பாசுக்கு செல்வார் என்று பேச்சு அடிப்பட்டு வருகிறது.

விவாகரத்து ஆகவில்லை: இதுகுறித்து திவ்யா ஸ்ரீதர் தனது இன்ஸ்டாகிராமில் லைவில் பேசி உள்ளார். அதில் இணையத்தில் பலர் அர்ணவின் முன்னாள் மனைவி என்று சொல்லுகிறார்கள். எங்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நாங்கள் இன்னும் முறைப்படி பிரியவில்லை, ஒருவேளை அவர் வேண்டுமானால் விவாகரத்து ஆகிவிட்டது என்று சொல்லிக்கொண்டு இருக்கலாம். ஆனால், உண்மை இதுதான். ஒரு சிங்கிள் மதராக நான் பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன்.வாழ்க்கையில் நான் பார்க்காத பிரச்சனைகளே இல்லை.

யாரையும் நம்பாதீங்க: என் கர்ப்ப காலத்துல என் வாழ்க்கை சந்திக்காத பல பிரச்சனைகளை சந்தித்தேன், குழந்தையை வெச்சிக்கிட்டு ஷூட்டிங்கிற்கு போனேன் ரொம்ப வேதனையா இருந்தது. இந்த நேரத்தில் தான் என் அம்மாவும் இறந்து விட்டார்கள். இப்போ அப்பா தான் என் இரண்டு மகள்களையும் பார்த்துக்கொள்கிறேன். வாழ்க்கையில் அப்பா, அம்மாவை தவிர வேற யாரையும் நம்பாதீங்க, அவங்க மட்டும் தான் நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஒருவரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டு, யாரும் நல்ல இருக்க முடியாது. இப்போதைக்கு வேண்டுமானால் நல்லா இருக்கலாம் ஆனால், உண்மையில் கடவுள் வானத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருப்பார்.

எல்லாம் உங்களால் தான்: ஆனால் இப்போது நான், என் குடும்பம் என் வாழ்க்கைனு சந்தோஷமா இருக்கேன் அதுக்கு காரணம் நீங்க தான். தமிழக மக்களை நான் என்னைக்கும் மறக்கவேமாட்டேன். ஒவ்வொரு முறை நான் துவண்டு போகும் போது, எனக்கு தைரியத்தை கொடுப்பது நீங்க தான், திவ்யா உன்னால பண்ணமுடியும் செய் என்று பல பேர் எனக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறீர்கள் அதற்கு ரொம்ப நன்றி தொடர்ந்து எனக்கு உங்களின் ஆதரவு தேவை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X