செவ்வந்தி சீரியல் நடிகை வீட்டில் திடீர் மரணம்.. கண்ணீரில் ஆழ்த்திய பெரும் சோகம்!

சென்னை: செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதரின் தாயார் உடல்நலக்குறைவு காரணமா உயிரிழந்தார். அவருக்கு வயது 59. நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவரது உயிர் பிரிந்தது. இது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னத்திரையில் கேளடி கண்மணி மூலம் அறிமுகமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். இவர் சின்னத்திரையில் அறிமுகமாகும் முன்பே திருமணமாகி முதல் கணவருடன் ஒரு மகள் உள்ளார். அவருடன் ஏற்பட்டகருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து பெற்றனர். இவருடைய முதல் திருமணத்தில் என்ன பிரச்சனை? எப்படி விவாகரத்தானது? அவர் யார்? என்ற எந்த விவரம் எதுவும் தெரியவில்லை.

Divya Sridhar Sevvanthi serial Arnav

திவ்யா ஸ்ரீதர், அர்னவ்: திவ்யா ஸ்ரீதர் கேளடி கண்மணி' சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது, அந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த அர்னவ் மீது திவ்யாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்பில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்த வந்த நிலையில், இருகுடும்பத்தினர் மட்டும் கலந்து கொண்டு எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதையடுத்து, திவ்யா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் போட்டோ போட்டு அறிவித்தார்.

பெரும் சர்ச்சை: இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், மேலும், அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், செல்லம்மா சீரியல் நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், அதை கேட்டதற்கு அர்னவ் தன்னை தாக்கியதால் வயிற்றில் அடிபட்டு ரத்தம் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் ரத்தம் கூறி இருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். திவ்யாவிற்கு கடந்த ஆண்டு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது செவ்வந்தி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

Divya Sridhar Sevvanthi serial Arnav

திடீர் மரணம்: இந்நிலையில் நடிகை திவ்யா ஸ்ரீதரின் தாயார் நீலாவதி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்டு பின்,திவ்யா ஸ்ரீதரின் சொந்த ஊரான பெங்களுருக்கு அம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.சீரியல் நடிகையின் தாய் திடீரென உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் திவ்யாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X