விபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்

By Siva

Recommended Video

விபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நடிகை- வீடியோ

ஹைதராபாத்:நடிகை மெஹ்ரீன் பிர்சாதாவிடம் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகள் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

தெலுங்கு, கன்னட நடிகைகளை கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிகாகோவில் வசித்து வந்த தெலுங்கு படங்களை தயாரித்த கிஷன் மற்றும் அவரின் மனைவி சந்திரா ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஷூட்டிங்

ஷூட்டிங்

தெலுங்கு படங்களில் நடித்து வரும் மெஹ்ரீன் பிர்சாதா கனடாவின் வான்கூவர் நகரில் இருந்து அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். கனடாவில் நடந்த தெலுங்கு பட ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிறகு தனது குடும்பத்தாரை சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளார்.

விசாரணை

விசாரணை

அமெரிக்க விமான நிலையத்தில் மெஹ்ரீன் தான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்று கூறியதும் குடியேற்றத் துறை அதிகாரிகள் அவரிடம் 30 நிமிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விபச்சார வழக்கில் கிஷன் கைதான பிறகு தெலுங்கு நடிகைகள் அமெரிக்கா வந்தாலே விசாரணை நடத்தப்படுகிறதாம்.

நடிகை

நடிகை

நான் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருப்பதால் எனக்கு நடந்த விஷயம் தெரியாது. நான் ஒரு நடிகை அதுவும் தெலுங்கு நடிகை என்றதுமே 30 நிமிடம் விசாரணை நடத்தினார்கள். எனக்கு அதிர்ச்சியாகவும், அசிங்கமாகவும் இருந்தது என்கிறார் மெஹ்ரீன்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

நடிகைகள் அமெரிக்காவுக்கு வந்து விபச்சாரத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். அதனால் தான் அமெரிக்காவுக்கு வரும் அனைத்து தெலுங்கு நடிகைகளிடமும் விசாரணை நடத்துவதாக அவர்கள் மேலும் கூறினார்கள். அசவுகரியத்திற்கு அவர்கள் மன்னிப்பும் கேட்டனர் என்று மெஹ்ரீன் தெரிவித்துள்ளார்.

விஜய்

விஜய்

ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் நோட்டா படம் மூலம் அர்ஜுன் ரெட்டி படம் புகழ் விஜய் தேவரகொண்டா கோலிவுட் வந்துள்ளார். அந்த படத்தின் ஹீரோயின் மெஹ்ரீன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X