நடிகைக்கு செக்ஸ் தொந்தரவு... இயக்குநர் மீது புகார்

By Chakra

மும்பை: நடிகைக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாக இயக்குநர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சமாச்சாரம் நடந்தது இங்கல்ல... போஜ்புரி சினிமாவில்.

பிரபல போஜ்புரி நடிகை ரிது பாண்டே (வயது 22). 15-க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார்.

இவர் இந்திப்பட காஸ்டிங் இயக்குநர் (கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர், நடிகைகளை தேர்வு செய்து தருபவர்) வான்ஸ் பதக் மீது நேற்று மிரா ரோடு போலீஸ் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

அதில், "நான் ஒரு போஜ்புரி நடிகை. பாலிவுட் படவுலகில் நுழைந்து, இந்திப் படங்களில் நடித்து பிரபலம் ஆக விரும்பினேன். இதற்காக காஸ்டிங் இயக்குநர் வான்ஸ் பதக்கை ஒரு பொது நண்பர் மூலம் கோரோ காவ்வில் வைத்து சந்தித்துப் பேசினேன். இந்திப்பட வாய்ப்பு தருமாறு கேட்டுக்கொண்டேன்.

ஆனால் அவர் அந்தச் சந்திப்பிலிருந்து என்னை அவருடைய ஆசைக்கு இணங்குமாறு கூறி வருகிறார். அவரது ஆசைக்கு நான் இணங்கினால்தான் பெரிய ஆளாக வர முடியும் என்றும் அப்படி இணங்காவிட்டால் என் எதிர்காலத்தை அழித்து விடுவதாகவும் போனில் மிரட்டுகிறார்.

செல்போனிலும் ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்புகிறார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்...", என்று கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து மிரா ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அவினாஷ் சவந்த் கூறுகையில், "நடிகையின் புகார் குறித்து விசாரித்து கொண்டிருக்கிறோம். வான்ஸ் பதக்கை அழைத்தும் விசாரணை நடத்துவோம். முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் தேவைப்பட்டால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும்'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X