உலக இசை விருதை பெற்றுவருவாரா பிரியங்கா சோப்ரா?

By Mayura Akilan

மும்பை: 2013ம் ஆண்டின் உலக இசை விருதுக்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் இசை ஆல்பம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

2012ம் ஆண்டுக்கான ஆசியாவில் செக்ஸியஸ்ட் பெண் என்ற பெயரை பெற்றுள்ள பிரியங்கா சோப்ரா அழகாகப் பாடக்கூடியவர். இவர் பாடிய 'இன் மை சிட்டி' ஆல்பம் சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே 2013ம் ஆண்டிற்கான உலக இசை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அழகான நடிகைகள் எல்லாம் டப்பிங் பேசி நடித்து வருகின்றனர். ஆனால் உலக அழகி பட்டத்தை வென்று பாலிவுட் பட உலகில் வெற்றி பெற்றவர் பிரியங்கா சோப்ரா. இந்த ஆண்டிற்கான ஆசியாவிலேயே மிகவும் கவர்ச்சியான பெண் என்ற பெயரையும் பெற்றுள்ள பிரியங்கா சோப்ராவின் சாதனையில் இது சிறந்த மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

உலக அழகி பட்டம்

உலக அழகி பட்டம்

2000மாவது ஆண்டில் உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா பாரம்பரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை டாக்டர் அசோக் சோப்ரா ஒரு சிறந்த பாடகர் ஆவார். இவர் மொகமது ரக்பியுடன் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

30 வயசானாலும் இளமை

30 வயசானாலும் இளமை

உலக அழகி பட்டம் வென்ற உடன் தமிழில் நடிகர் விஜய் உடன் தமிழன் படத்தில் நடித்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. இதன் பின்னர் பாலிவுட் பட உலகிற்கு சென்ற அவர், 12 ஆண்டுகாலமாக நடித்து வருகிறார். 30 வயதானாலும் இளமை மாறாமல் இருப்பதாக பாலிவுட் திரை உலகில் பேசப்படுகிறது. அழகோடு திறமையும் இருப்பதால்தான் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறுவதாக கூறுகின்றனர்.

இசையால் கனவு பலித்தது

இசையால் கனவு பலித்தது

நடிப்பதோடு மட்டுமல்லாமல் பாடவேண்டும் என்பது பிரியங்காவின் ஆசை. இதனால் ஆங்கிலத்தில் பாடிய இசை ஆல்பம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டார். அதில் இருந்த வித்தியாசமான அமைப்பு பரபரப்பாக பேசப்பட்டது.

கரீனாவை ஓரங்கட்டினார்.

கரீனாவை ஓரங்கட்டினார்.

இந்த நிலையில் இணையதள வார இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் கரீனா கபூர், கத்ரீனாகைப் ஆகியோரை பின்னுக்குத் தள்ளிவிட்டு 2012ம் ஆண்டின் ஆசியாவிலேயே கவர்ச்சிகரமான பெண் என்ற பட்டத்தை தட்டிச்சென்றுள்ளார்.

உலக இசை விருதுக்கு ...

உலக இசை விருதுக்கு ...

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவின் ஆல்பம் உலக இசை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த இசை ஆல்பம் வெளியானது. இந்த ஆல்பம் சிறந்த பாடல், சிறந்த காட்சியமைப்பு, சிறந்த அறிமுக கலைஞர் ஆகிய மூன்று கட்டங்களில் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகை என்ற பெயரெடுத்த பிரியங்கா உலக இசை விருதினை பெற்றுவருவாரா? பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X