நடிக்க வைப்பதாகக் கூறி பெண்களுடன் உல்லாசம்.. தமிழ் சினிமா பிரபலம் மீது பெண் பரபரப்பு புகார்!

நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி பெண்களுடன் உல்லாசம் அனுபவித்ததாக, தமிழ் காஸ்டிங் இயக்குனருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி படுக்கை அழைத்த மோகன்- வீடியோ

சென்னை: வாய்ப்பு தருவதாகக் கூறி தனது தோழியை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக, தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த காஸ்டிங் இயக்குனர் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை, ஒரு சிலர் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற காஸ்டிங் கவுச் குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பலர் மீது நடிகை ஸ்ரீரெட்டி இது தொடர்பாக புகார் அளித்து திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்தார்.

இது ஒருபுறம் இருக்க, பணியிடங்களில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் மீ டூ மூலம் பல ஆண்களின் முகத்திரையைக் கிழித்தனர். திரைத்துறையிலும் மீ டூ புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக பெண்கள் இந்த மீ டூவை ஆண்களுக்கு எதிராகப் பயன்படுத்துகின்றனர் என்ற வாதமும் உள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகர்களை தேர்ந்தெடுக்கும் காஸ்டிங் இயக்குனர் மோகன் என்பவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல்:

மிரட்டல்:

இது தொடர்பாக அப்பெண் வெளியிட்டுள்ள ஆடியோவில், ‘காஸ்டிங் இயக்குனரான மோகன், தன்னுடைய தோழியையும், மேலும் பல பெண்களையும் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக்கொண்டதாக' குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ‘வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆசை வார்த்தைக் கூறி மோகன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், இதனை வெளியில் சொன்னால் அப்பெண்கள் பலருடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் மோகன் மிரட்டியதாக' அப்பெண் தெரிவித்துள்ளார்.

வைரலான வீடியோ:

வைரலான வீடியோ:

தனது புகாருக்கு ஆதாரமாக, மோகன் பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்த வீடியோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும், போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னுடைய பெயரை வெளியிட தற்போது அப்பெண் மறுத்து விட்டார். இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வைரலாகியுள்ளது.

வாழ்க்கை பாதிக்கும்:

வாழ்க்கை பாதிக்கும்:

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மோகன், ‘தன்னுடைய அறையில் யாரோ சிலர் கேமரா வைத்து இந்த வீடியோக்களை எடுத்துள்ளதாகவும், இதனால் தன்னுடைய குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும்' கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் போலீசுக்கு சென்றால் பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.

கவலையில் பெரும்புள்ளிகள்:

கவலையில் பெரும்புள்ளிகள்:

இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பல முன்னணி நடிகர், நடிகைகளின் படங்களில் காஸ்டிங் ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்தவர் மோகன். ஒருவேளை மோகன் போலீசில் சிக்கினால், பல பெரும் புள்ளிகளின் பெயர்கள் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால் மோகனுக்கு நெருக்கமான பெரும் புள்ளிகள் கவலையில் இருப்பதாகத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X