twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாய்ப்புத் தருவதாகக் கூறி பாலியல் தொல்லை விவகாரம்.. பிரபல நடிகைகளுக்கு மகளிர் ஆணையம் சம்மன்!

    By
    |

    மும்பை: மாடலிங் வாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட வழக்கில், பிரபல நடிகைகளுக்கும் தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

    Recommended Video

    வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!

    ஐஎம்ஜி வென்சர் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சன்னி வர்மா. இந்த நிறுவனம், மிஸ்டர், மிஸ் இந்தியா போட்டிகளை பல்வேறு பகுதிகளில் நடத்தி வருகிறது.

    ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. இதற்காக பல இளம் மாடல்களை இந்நிறுவனம் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

    ஆத்தாடி காம பார்வையால இருக்கு... ரியா சென் வெளியிட்ட ஹாட் பிக்ஸ் !ஆத்தாடி காம பார்வையால இருக்கு... ரியா சென் வெளியிட்ட ஹாட் பிக்ஸ் !

    மகளிர் ஆணையம்

    மகளிர் ஆணையம்

    இந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் பல நடிகர், நடிகைகள், சினிமா இயக்குனர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான 'பாரி' (PARI) என்ற அமைப்பின் நிறுவனர் யோகிதா பாயனா என்பவர் தேசிய மகளிர் ஆணையத்தில், புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் ஐஎம்ஜி வென்சர் நிறுவனம் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

    பாலியல் வன்கொடுமை

    பாலியல் வன்கொடுமை

    மாடலிங் வாய்ப்பு வாங்கி தருவாகக் கூறி பல இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் இந்நிறுவனத்தின் சன்னி வர்மா மீது புகார் கூறியிருந்தார். மேலும் 'விண்ணப்பிக்கும்போது கட்டணமாக 2950 ரூபாய் வசூலித்துவிடுவார்கள். பிறகு சன்னி வர்மாவின் பெண் ஊழியர்கள், மாடலிங் ஆசைகொண்ட இளம் பெண்களிடம் நிர்வாண படங்களை கேட்பார்கள்.

    நிர்வாணப் படம்

    நிர்வாணப் படம்

    அதைக் கொடுத்தால் வாய்ப்பு உடனே கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். நிர்வாணப் படம் கிடைத்த உடன், நிர்வாண வீடியோவுக்கு தள்ளுவார்கள். பிறகு சன்னி வர்மா, வாய்ப்பு வேண்டும் என்றால் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவர்களை தனது ஆசைக்கு கட்டாயப்படுத்துவார்' என்று புகாரில் கூறியுள்ளார். இந்தப் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ஊர்வசி ரவ்தெலா

    ஊர்வசி ரவ்தெலா

    சன்னி வர்மாவின் நிறுவனத்துக்கு பல டிவி, சினிமா நடிகர், நடிகைகள் வீடியோ மூலம் புரமோஷன் செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தார். அவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் பற்றி தேசிய மகளிர் ஆணையம் விசாரித்து வருகிறது. ஐஎம்ஜி வென்சர் நிறுவனத்துக்கு வீடியோ மூலம் புரமோஷன் செய்துள்ள நடிகைகள் ஊர்வசி ரவ்தெலா, இஷா குப்தா, நாகினி நடிகை மவுனி ராய், பிரின்ஸ் நருல்லா, இயக்குனர் மகேஷ் பட் உட்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    நடிகர் சோனு சூட்

    நடிகர் சோனு சூட்

    ஆனால், அவர்கள் மகளிர் ஆணையம் சொன்ன நேரத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் வரும் 18 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா தெரிவித்துள்ளார். நடிகர் சோனு சூட்டும் இதன் விளம்பரத்தில் பங்கேற்றுள்ளார் என்றும் அவருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் ஒத்துழைப்பாகக் கூறியிருப்பதாகவும் ரேகா சர்மா கூறியுள்ளார்.

    English summary
    NCW issues fresh notices to Mahesh Bhatt, Urvashi Rautela, Esha Gupta, Mouni Roy in sexual assault case
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X