'ராம்போ' ஆக்ஷன் ஹீரோ பலாத்காரம் செய்துவிட்டார்: பெண் பரபரப்பு புகார்
நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் பல நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், சிலரை பலாத்காரமும் செய்துள்ளார். இதையடுத்து நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் #MeToo என்ற ஹேஷ்டேக்குடன் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகள் பற்றி தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெண் ஒருவர் ஹாலிவுட் நடிகர் ஸ்டலோன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

பலாத்காரம்
சில்வஸ்டர் ஸ்டலோன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட அட்டர்னி அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.

இல்லை
அந்த பெண் கொடுத்துள்ள பாலியல் புகாரை ஸ்டலோன் மறுத்துள்ளார். 1980களில் அந்த பெண் ஸ்டலோனுடன் விரும்பி உறவு வைத்துக் கொண்டதாக ஸ்டலோனின் வழக்கறிஞர் மார்டின் சிங்கர் தெரிவித்துள்ளார்.

புகார்
சம்மதத்துடன் உறவு கொண்டுவிட்டு தற்போது புகார் தெரிவித்து ஒருவரின் பெயரை கெடுப்பது சரியில்லை என்று ஸ்டலோனின் வழக்கறிஞர் மார்டின் கூறியுள்ளார்.

ஹாலிவுட்
தற்போது 71 வயதாகும் ஸ்டலோன் ராக்கி, ராம்போ, எக்ஸ்பென்டபிள்ஸ் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த ராக்கி படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











