இளம் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகர்

By Siva

மும்பை: இளம் நடிகையின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகரும், பாடகருமான பவன் சிங் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போஜ்புரி படங்களில் நடித்து வருபவர் பவன் சிங். அவர் பாடகரும் கூட. அவர் மீது 25 வயது நடிகை ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை போலீசில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

Sexual Harassment case filed against actor Pawan Singh

அவர் போலீசாரிடம் கூறியிருப்பதாவது,

நடிகர் பவன் சிங் என் அந்தரங்க புகைப்படங்களை என் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் என்னை பற்றி அசிங்கமாக கமெண்ட்டும் செய்துள்ளார். நானும், அவரும் நட்பாக பழகி வந்தோம்.

இந்நிலையில் நட்பை தொடர வேண்டும் என்று என்னை தொடர்ந்து மிரட்டி வந்தார் பவன் சிங். அவர் மிரட்டலுக்கு நான் மசியாததால் என் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார். பவன் சிங்கின் இந்த செயலால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை கேட்டுக் கொண்டுள்ளார்.

அந்த நடிகை அளித்த புகாரின்பேரில் மும்பை போலீசார் பவன் சிங், அவரது உதவியாளர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. நடிகையின் புகாரின்பேரில் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பவன் சிங் மீது புகார் தெரிவித்த நடிகை யார் என்ற விபரத்தை வெளியிட போலீசார் மறுத்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X