twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் வழக்கு: அர்ஜுன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த கர்நாடக ஹைகோர்ட்

    By Siva
    |

    Recommended Video

    கோலிவுட் - பாலிவுட் சுட சுட செய்திகள் - வீடியோ

    பெங்களூரு: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தொடர்ந்த பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி அர்ஜுன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    நிபுணன் படத்தில் நடித்தபோது அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். அதன் பிறகு பெங்களூர் காவல் நிலயைத்தில் அர்ஜுன் மீது புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    ஸ்ருதி கூறிய புகாரில் உண்மை இல்லை என்று கூறி வருகிறார் அர்ஜுன்.

    அர்ஜுன்

    அர்ஜுன்

    ஸ்ருதி தொடர்ந்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அர்ஜுன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ருதி வேண்டும் என்றே தன் மீது பொய் புகார் தெரிவித்து தனது பெயரை கெடுப்பதாக கூறி அர்ஜுன் அவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தடவல்

    தடவல்

    நிபுணன் படத்தின் ஒத்திகையின்போது அர்ஜுன் தன் அனுமதி இல்லாமல் தன்னை கட்டிப்பிடித்து பின்னால் தடவியதாக ஸ்ருதி தெரிவித்துள்ளார். நான் தற்போது அமைதியாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் இதை நினைத்து வேதனைப்படுவேன். அதனால் இதை வெளியே சொல்வது மிகவும் முக்கியம். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அதை தவறாக பயன்படுத்துபவர்களை கேள்வி கேட்கிறோம் என்கிறார் ஸ்ருதி.

    நீதி

    நீதி

    எனக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளது. எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்கிறார் ஸ்ருதி. அர்ஜுன் பற்றி ஸ்ருதி ஹரிஹரன் கூறியது எல்லாம் உண்மை என்று நிபுணன் செட்டில் இருந்த மேக்கப் கலைஞர் மற்றும் உதவி இயக்குனர் என்று இரண்டு பேர் பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    ஸ்ருதி என் தந்தையின் பெயரை கெடுக்க மாதக் கணக்கில் திட்டமிட்டு இந்த பொய் புகாரை தெரிவித்துள்ளார். நிபுணன் பட விளம்பர நிகழ்ச்சிகளின் போது எடுத்த வீடியோக்களில் எல்லாம் ஸ்ருதி என் தந்தையை பாராட்டியுள்ளார். ஸ்ருதியின் புகாரை தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரும் கூட மறுத்துள்ளனர் என்று அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

    English summary
    Actor Arjun's has filed a plea to dismiss the sexual harassment case filed against him by actress Sruthi Hairharan. Karnataja high court has postponed the hearing to november 29th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X