பாடகிக்கு பாலியல் தொல்லை: அம்பலப்படுத்திய சின்மயி, மன்னிப்பு கேட்ட பாடகர்
Recommended Video

சென்னை: பாலியல் புகார் தெரிவித்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார் பாடகர் ரகு தீக்சித்.
பாடகர் ரகு தீக்சித் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி ஒருவர் தனது பெயரை தெரிவிக்காமல் சின்மயியிடம் கூறினார். அந்த தகவலை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டார்.
ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தனது மனைவி பற்றி தவறாக பேசிய ரகு தன்னை அவருக்கு முத்தம் கொடுக்குமாறு கேட்டதாக அந்த பாடகி தெரிவித்துள்ளார். மேலும் அந்த பாடகியை தூக்க அவர் முயன்றிருக்கிறார். சின்மயியின் ட்வீட்டை பார்த்த ரகு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சின்மயி
அந்த புகார் தொடர்பாக என் பக்க கதையை கூறி மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். சின்மயியை தாக்குபவர்கள் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். அவர் நல்லவர். நான் முன்பு அவருடன் பேசியபோது மிகவும் நன்றாக பேசினார். ஹைதராபாத்தில் நடந்த என் இசை நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அவர் வீட்டிற்கு மதிய உணவுக்கு கூட அழைத்தார்.

பாடகி
சின்மயியின் ட்வீட் பற்றிய சம்பவம் எனக்கு நினைவில் உள்ளது. அந்த நபர் யார் என்று எனக்கு தெரியும். அவரிடம் நான் முன்பே மன்னிப்பு கேட்டுள்ளேன். தற்போது பொதுவில் மன்னிப்பு கேட்பதுடன் மீண்டும் அவரிடம் தனியாக மன்னிப்பு கேட்பேன். அந்த சம்பவம் நடந்தது, ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டது போன்று அல்ல. அந்த நபரை நான் கட்டிப்பிடித்தேன். நான் அவரை முத்தமிட முயன்றபோது அவர் என்னை தடுத்து நிறுத்தி, ஸ்டூடியோவில் இருந்து கிளம்பினார். என் செயல் பிடிக்கவில்லை என்று அவர் மெசேஜ் செய்தார். நான் மன்னிப்பு கேட்டேன்.

ஸ்டுடியோ
ரெக்கார்டிங் முடிந்து அவருடன் பேசியபோது என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச்சு வந்தது. என் மனைவிக்கும், எனக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் நான் ஆறுதல் தேடினேன். அந்த நபர் ரொம்ப ஸ்வீட், என் நிலையை புரிந்து கொண்டதால் நான் தவறுதலாக நினைத்துவிட்டேன். ஆனால் சின்மயி கூறிய சில விஷயங்களை நான் ஏற்க மாட்டேன்.

வாய்ப்பு
நான் பாலியல் விஷயத்திற்காக பெண்களுக்கு வலை போடுபவன் இல்லை. பாடும் வாய்ப்பு தருவதாக இந்த பாடகி அல்லது யாருக்காவது வாக்கு கொடுத்தேனா? இல்லவே இல்லை. அந்த பாடகி ஏற்கனவே பாடலை பாடி முடித்துவிட்டார். என் மனைவி பற்றி தவறாக பேசினேனா? இல்லை. ஆனால் பிரச்சனை உள்ளது என்றேன். நான் என் மனைவிக்கு சிறந்த கணவராக இல்லை. நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். விவாகரத்து கோரியுள்ளோம்.
ரசிகர்கள்
அந்த நபரிடம் நான் மீண்டும் மன்னிப்பு கேட்கிறேன். தனியாகவும் கேட்பேன். அவர் தனக்கு அசவுகரியமாக இருப்பதாக கூறிய உடனேயே மன்னிப்பு கேட்டேன். என்னை பிரிந்து இருக்கும் மனைவியிடமும் மன்னிப்பு கேட்கிறேன். அவர் அருமையான பெண். என் ரசிகர்கள் மற்றும் என்னையும், என் இசையையும் விரும்பும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பேன். பாதிக்கப்பட்டவர்களை நம்புமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ரகு.


Click it and Unblock the Notifications











