twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'செக்ஸி துர்கா' படத்தை திரைப்பட விழாவில் வெளியிட தடை - அரசை எதிர்த்து மூவர் ராஜினாமா!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'செக்ஸி துர்கா' படத்தை திரைப்பட விழாவில் வெளியிட தடை -அரசை எதிர்த்து மூவர் ராஜினாமா!- வீடியோ

    கோவா : கோவா திரைப்பட விழாவில் திரையிடப்படாமல் 'செக்ஸி துர்கா' படம் தடுக்கப்பட்டது மலையாள திரையுலகில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. சணல் குமார் சசிதரன் இயக்கிய 'செக்ஸி துர்கா', மற்றும் 'நியூட்' ஆகிய இரு படங்கள் திரையிடலில் இருந்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

    திரைப்பட விழாக்களுக்கு தங்கள் படங்களை அனுப்பி விருதுகளை அள்ளும் மலையாள இயக்குனர்களில் ஒருவர் தான் சணல் குமார் சசிதரன். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'செக்ஸி துர்கா' என டைட்டில் வைத்துள்ளார். இந்தப் படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பால் 'எஸ்.துர்கா' என சென்சார் போர்டு வழிமுறைகளின்படி டைட்டில் மாற்றப்பட்டுள்ளது.

     Sexy durga movie controversy - 2 officials resigned

    'எனது படத்தின் துர்கா கேரக்டர் மதம் சார்ந்து எந்தப் பிரச்னைகளையும் கிளப்பாது. நீங்கள் எஸ். துர்கா, ஏ.துர்கா, பி.துர்கா என என்ன பெயரில் மாற்றினாலும் அது செக்ஸி துர்காவாகத்தான் தொடரும்' என இந்தப் படத்தின் இயக்குநர் சணல் குமார் சசிதரன் கோபமாகப் பேசியுள்ளார்.

    கேரளாவில் தற்போது சமூகத்தை அச்சுறுத்தி வரும் ஒரு விஷயத்தை நையாண்டி செய்து படமாக்கி இருக்கிறாராம் சணல் குமார் சசிதரன். அதனால் படம் ஆரம்பித்ததில் இருந்தே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்தார்.

    இந்தநிலையில் கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள இந்தியன் பனோராமாவல் இந்தப்படம் தேர்வு செய்யப்பட்டு, அந்தப்பட்டியல் செய்தி ஒளிபரப்புத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் இறுதி செய்யப்பட்ட திரும்பி வந்த பட்டியலில் 'செக்ஸி துர்கா' மற்றும் 'நியூட்' என இரண்டு படங்கள் நீக்கப்பட்டு விட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜூரி சேர்மன் சுஜாய் கோஷ் மற்றும் இன்னும் இரு ஜூரி உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினமா செய்துள்ளார்கள்.

    English summary
    The film 'Sexy Durga' has been blocked in the Goa film festival. Jury Chairman Sujay Ghosh and two other Jury members have resigned their post against government.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X