சிவகார்த்திகேயன் பட்ட கஷ்டம் தெரியுமா?.. ஓபனாக போட்டுடைத்த சந்தோஷ் நாராயணன்
சென்னை: தாய் கிழவி படத்தை இம்ப்ரெஸ் ஆன சிவகார்த்திகேயன்; அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கமல்ஹாசன் இரண்டாவது முறையாக எஸ்கேவை வைத்து தயாரிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்றன. சில நாட்களுக்கு முன்புதான் படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியது. இந்நிலையில் படம் குறித்து சந்தோஷ் நாராயணன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
அமரன் படம் பெற்ற மெகா வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். அமரனுக்கு பிறகு அவர் நடித்த பராசக்தி, மதராஸி ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக கொஞ்சம் டல்லடிக்கத்தான் செய்தன. அதேசமயம் வசூலில் மாஸ் காண்பித்தன. மதராஸி திரைப்படம் 50 கோடி ரூபாயும், பராசக்தி திரைப்படம் 100 கோடி ரூபாயையும் அள்ளின. விமர்சன ரீதியாக அடிவாங்கினாலும் வசூலில் கெத்து காண்பித்ததால் எஸ்கே ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள்.

சிவகார்த்திகேயனின் சேயோன்: அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில்தான் நடிப்பதாக முதலில் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. இதற்கிடையே தாய் கிழவி படத்தால் இம்ப்ரெஸ் ஆன சிவா; அதன் இயக்குநர் சிவக்குமாரின் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே கமல் - எஸ்கே கூட்டணியில் உருவான அமரன் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதால் இதன் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
வெளியான க்ளிம்ப்ஸ்: சில மாதங்களுக்கு முன்பு எஸ்கேவின் பிறந்தநாளை முன்னிட்டு க்ளிம்ப்ஸும் வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன் சாமி ஆடியபடி காவல் நிலையத்துக்கு வந்து; தன்னை தாக்க வந்தவர்களை தாக்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மேலும் அந்த க்ளிம்ப்ஸை பார்க்கையில் இப்படம் பக்கா கிராமத்து படமாக உருவாகும் என்று தெரிகிறது.
தொடங்கிய ஷுட்டிங்: க்ளிம்ப்ஸ் காட்சிகள் எல்லாம் வெளியிடப்பட்டாலும் படத்தின் ஷூட்டிங் தொடங்காமல் இருந்தது. அந்த நாளுக்காக அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்தார்கள். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு பூஜை போட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்டது. அதில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். இந்நிலையில் சேயோன் படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
சந்தோஷ் நாராயணன் பேட்டி: அவர் கொடுத்த பேட்டியில், "சேயோன் திரைப்படம் என்னுடைய பெர்சனல் ஸ்டேட்மெண்ட் மாதிரிதான் இருக்கும். இதை நான் ஒரு வேலையாக பார்க்கவில்லை. நான் கற்றுக்கொண்டதை வைத்து என்னுடைய சிறந்ததை கொடுக்க வேண்டும் என்று நினிஅத்தேன். இந்தப் படம் ரசிகர்களை பயங்கரமாக என்ட்டெர்டெயின்மென்ட் செய்யும் என நம்புகிறேன். சிவகார்த்திகேயன் ரொம்பவே கஷ்டப்பட்டார். டிவியிலிருந்து சினிமாவுக்கு வருவது கஷ்டம். அதை உடைத்து பெரிய இடத்துக்கு சென்றார். நாங்கள் இரண்டு பேரும் ஓபனாக பேசக்கூடியவர்கள். இங்கே எங்களுக்கு யாரையும் தெரியாது. இன்று சிவாவை நினைத்து எனக்கு பெரிய பெருமை" என்றார்.


Click it and Unblock the Notifications
