Samantha - சமந்தாவின் கேரியரில் மோசமான தோல்வி படமா சாகுந்தலம்?.. வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை: Samantha (சமந்தா) சமீபத்தில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் சமந்தாவின் கேரியரில் மோசமான தோல்வி படம் என்ற பெயரை எடுத்துவிடுமோ என்ற அச்சத்தில் சமந்தாவின் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கில் நடித்தபோது நாக சைதன்யாவை காதலித்தார். இவர்களது திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்திவந்தார். அப்படி அவர் நடித்த படங்களுக்கும் நன்றாகவே வரவேற்பு கிடைத்தது.

பிரிவு: இருவரது திருமண வாழ்க்கையும் சிறப்பாக போய்க்கொண்டிருந்த சூழலில் சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக இருவருமே அறிவித்தனர். இதற்கு பல காரணங்கள் யூகங்களாக சொல்லப்பட்டன. ஆனால் தங்களது பிரிவு குறித்து இரண்டு பேருமே அமைதியாக இருந்தார்கள். திருமண வாழ்க்கை முறிவுக்குப் பிறகு சமந்தாவால் திரையுலகில் நிச்சயம் நிலைக்க முடியாது அவரது கிராஃப் இறங்கிவிடும் என சிலர் ஆரூடம் கூறினர்.

Shaakuntalam Movie Collects 7 Crores in One Week

அடித்து நொறுக்கிய சமந்தா: ஆனால் அவர்களின் ஆரூடத்தை அடித்து நொறுக்கும் விதமாக திருமண முறிவுக்கு பிறகு படங்களில் கமிட்டானார் சமந்தா. குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு அவர் போட்ட நடனம் அவருக்கு மேற்கொண்டு ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதுமட்டுமின்றி ஹாலிவுட் படத்திலும் ஹிந்தி வெப் சீரிஸிலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.

சாகுந்தலம்: சூழல் இப்படி இருக்க சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் தோல் நோய் வந்தது. அதற்காக அவர் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையை முடித்து அதிலிருந்து மீண்ட சமந்தா இப்போது சாகுந்தலம் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படமானது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் ரசிகர்களிடம் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

Shaakuntalam Movie Collects 7 Crores in One Week

மேலும், படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் கார்ட்டூன் காட்சிகளை பார்ப்பதுபொல் இருப்பதாகவும் ரசிகர்கள் வெளிப்படையாகவே விமர்சனத்தை வைத்தனர். சமந்தாவின் நடிப்பில் அடுத்ததாக குஷி என்ற படம் வெளியாகவிருக்கிறது.

வசூல் நிலவரம்: இந்நிலையில் சாகுந்தலம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படம் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் முடிவடைகின்றது. ஒருவாரம் முடிவில் இந்தப் படமானது 7 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தியேட்டருக்கு ரசிகர்கள் வராததால் படத்துக்கான தியேட்டர்கள் எண்ணிக்கையும் குறையும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் சமந்தாவின் கேரியரில் சாகுந்தலம் மிகப்பெரிய தோல்வி படமாக கருதப்படுகிறது.

Shaakuntalam Movie Collects 7 Crores in One Week

சிட்டாடல் வெப் சீரிஸ்: இதற்கிடையே சமந்தா அடுத்ததாக சிட்டாடல் என்ற வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார். இது ஆங்கிலத்தில் உருவான வெப் சீரிஸ் ஆகும். இந்த வெப் தொடரானது ஹிந்தியிலும் ரீமேக்காக இருக்கிறது. இதில் வருண் தவான், சமந்தா உள்ளிட்டோர் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கின்றனர். ஃபேமிலி மேன், ஃபர்ஸி ஆகிய வெப் சீரிஸ்களை இயக்கி கவனம் ஈர்த்த ராஜ்&டிகே இந்த வெப் சீரிஸை இயக்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X