பிளாப் ஆன சாகுந்தலம்..சம்பாதித்த மொத்த பணமும் போச்சு..22 கோடி நஷ்டம்!
சென்னை : சாகுந்தலம் படத்தின் தோல்வியால் சம்பாதித்த மொத்த பணமும் போச்சு என்று தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பி உள்ளார்.
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன் நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியானது.

புராணக்கதையான சாகுந்தலம் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சமந்தா சகுந்தலையாக நடித்திருந்தார்.
சாகுந்தலம் : சரித்திர கதையம்சம் கொண்ட இப்படமாக 3டி வடிவில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியானது. சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும் 7 கோடியை மட்டுமே வசூலித்து, தயாரிப்பாளர் தில் ராஜூக்கு 22 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
புலம்பிய தில் ராஜூ : சாகுந்தலம் படம் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பு, பிரபல ஓடிடி தளத்திற்கு ரூ. 35 கோடிக்கு விற்கப்பட்டது. இதுமட்டும் முன்பே விற்பனை ஆகவில்லை என்றால், இதைவிட பெரிய நஷ்டத்தை சந்தித்து இருப்பார். வழக்கமாக பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தும் தில் ராஜூ, சாகுந்தலம் படத்தில் தனது கணக்கு தவறாகி விட்டது என்றும்,25 வருட சினிமாவில் இதுவரை இல்லாத நஷ்டத்தை தற்போது சந்தித்து உள்ளதாக தில் ராஜூ புலம்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேவையில்லாத செலவு : புராணகதையான சாகுந்தலம் படத்தின் தோல்விக்கு இரண்டு விஷயங்கள் தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. படத்தை பிரம்மாண்டமான படமாக எடுக்க வேண்டும் என நினைத்து இயக்குநர் தேவையில்லாத செலவு செய்து 3டியில் படத்தை எடுத்துள்ளார். படத்தில் இரண்டு மூன்று காட்சிகளைத் தவிர, 3டி காட்சிகள் தேவையில்லாதது.

இந்தி சீரியல் : சாகுந்தலம் திரைப்படத்தை பார்த்தால், இந்தி பட சீரியலை பார்ப்பது போல, ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களை பார்ப்பது போல இருந்தது,சமந்தாவை தவிர எந்த கதாபாத்திரமும் நன்றாக இல்லை என்று சாகுந்தலம் படம் பார்த்தவர்கள் குறை கூறினார்கள்.


Click it and Unblock the Notifications