சாகுந்தலம் முதல் ருத்ரன் வரை..தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் படங்கள்.. வசூலை அள்ளும் படம் எது?
சென்னை : அடுத்த வாரம் தமிழ் புத்தாண்டு வருவதால் பல திரைப்படங்கள் வரிசை கட்டிக்கொண்டு வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.
இதனால், அடுத்த வாரம் சினிமா பிரியர்களுக்கு எந்த படத்தை பார்க்கலாம் என்கிற குழப்பமே வரும் அளவுக்கு சமந்தா, விஜய் ஆண்டனி, ஐஸ்வர்யா ராஜேஷ், லாரன்ஸ் போன்றவர்களின் படங்கள் வெளியாக உள்ளது.
இதில் எந்த நடிகரின் படம் வசூலை அள்ளும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
சாகுந்தலம் : நடிகை சமந்தா நடித்துள்ள காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் படத்தில் சமந்தா சாகுந்தலையாக நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் இப்படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக 3டியில் உருவாக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா ரெட்டி நடித்த ருத்ரமா தேவி படத்தை இயக்கிய இயக்குனர் குணசேகரன் இப்படத்தை இயக்கி உள்ளார். பலமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் வெளியாகாத நிலையில் சாகுத்தலம் படம் ஏப்ரல் 14ந் தேதி வெளியாக உள்ளது.

சொப்பன சுந்தரி : பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அண்மையில் இவரது நடிப்பில், தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது 'சொப்பன சுந்தரி' என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில், லட்சுமி பிரியா, தீபா சங்கர், கருணாகரன், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ளது.

ருத்ரன் : ராகவா லாரன்ஸ் நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக உள்ள திரைப்படம் ருத்ரன். பான் இந்தியத் திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், நாகர், ரெட்டின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தமிழரசன் : விஜய் ஆண்டனி நடிப்பில் பிச்சைக்காரன் 2 படத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நீண்டநாட்களாக வெளியாகாமல் இருந்த தமிழரசன் திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக உள்ளது. பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி, சோனு சூட் உட்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.'

திருவின் குரல் : க்ரைம், த்ரில்லர் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி தற்போது திருவின் குரல் படத்தில் நடித்துள்ளார். பல மாஸ் ஹிட்படங்களை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹரிஷ் பிரபு இயக்கி உள்ள இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விக்ரம் வேதா படத்தின் மூலம் பிரபலமடைந்த சாம் சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 14ந் தேதி வெளியாக உள்ளது.
ரிப்பப்பரி : அறிமுக இயக்குநர் நா.அருண் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் படம் ரிப்பப்பரி. இதில் மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்க, நாயகிகளாக ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். திவாரகா தியாகராஜன் இசையமைத்திருக்கும் இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'ரிப்பப்பரி' வெளியாக உள்ளது.
யானைமுகத்தான் : நடிகர் யோகி பாபு லீட் ரோலில் நடிக்கும் திரைப்படம் யானைமுகத்தான். இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித் மிதிலா இயக்கிய தமிழில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். இதில் யோகிபாபு, ரமேஷ் திலக் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், கருணாகரன், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் பேரடி, குளப்புள்ளி லீலா, நாகவிஷால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ் வருடப்பிறப்பு அன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











