பிக் பாஸ் வீட்டில் விஜய் பட இயக்குநர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை?
சென்னை: இயக்குநர் ஒருவர் மீது மீ டூ புகார் தெரிவித்த ஷாலு ஷம்மு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. இந்த சீசனில் யார், யார் போட்டியிடப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு நடிகை ஷாலு ஷம்மு செல்ல உள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

ஷாலு ஷம்மு
விஜய் தேவரகொண்டாவின் புதுப்படத்தில் நடிக்க வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வர வேண்டும் என்று பிரபல இயக்குநர் ஒருவர் தன்னிடம் கூறியதாக நடிகை ஷாலு ஷம்மு அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் ஷாலு ஷம்மு பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. நெட்டிசன்களோ அவர் உறுதியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று நினைத்து வாழ்த்து தெரிவிக்கத் துவங்கிவிட்டனர்.

பிக் பாஸ்
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல சம்பவங்களை காப்பியடித்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைப்பதை கடந்த இரண்டு சீசன்களாக பார்த்துள்ளோம். இந்தி நிகழ்ச்சியில் சர்ச்சை ஆசாமிகளாக தேர்வு செய்து தான் போட்டியாளர்களாக அறிவிப்பார்கள். அதனால் இந்தி பிக் பாஸ் வழியில் சர்ச்சையை மனதில் வைத்து ஷாலுவை தேர்வு செய்துவிட்டார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

ராதாரவி
பிக் பாஸ் 3 வீட்டிற்கு நடிகர்கள் ராதாரவி, பிரேம்ஜி அமரன் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் செல்வதாகக் கூட பேசப்படுகிறது. போட்டியாளர்கள் யார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை இப்படி பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டே இருக்கும். கடந்த 2 சீசன்களின்போதும் கூட இப்படித் தான் பலரின் பெயர் அடிபட்டது.

ப்ரியா ஆனந்த்
நடிகைகள் லைலா, கஸ்தூரி, ப்ரியா ஆனந்த், சாக்ஷி அகர்வால் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த லைலாவோ நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். ஒவ்வொரு முறை பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும்போதும் கஸ்தூரியின் பெயர் அடிபடுவது வழக்கமாகிவிட்டது. இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருக்க கஸ்தூரி தயாராக இல்லை. அதனால் தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைத்தும் முடியாது என்று கூறிவிட்டார்.


Click it and Unblock the Notifications











