ஷாம் நடித்த 6... செப்டம்பர் 13-ல் பிரமாண்ட ரிலீஸ்!

By Shankar

சென்னை: ஷாம் நடித்த '6' படம் வரும் செப்டம்பர் 13-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகிறது.

தெலுங்கில் கிக் என்ற ஹிட் கொடுத்த பிறகு, ஒரு இடைவெளி விட்டு விஇஸட் துரை இயக்கத்தில் ஷாம் நடித்த படம் 6.அவருக்கு ஜோடியாக பூனம் கவுர் நடித்துள்ளார். மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தன் சினிமா வாழ்க்கையின் மிக முக்கிய படமாகக் கருதி, சிரத்தையெடுத்து நடித்துள்ளார் ஷாம். வாட்ட சாட்டமான வாலிபராக இருந்தவர், இந்தப் படத்துக்காக 20 கிலோவுக்கு மேல் உடல் மெலிந்து, கண்களின் கீழ்ப் பகுதிகளை வீங்க வைத்தெல்லாம் உருவிலும் நடிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார்.

படத்தில் 6 வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுகிறார் ஷாம். மேலும் இந்தியா முழுவதிலும் இந்தப் படத்துக்காக ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.

Shaam's 6 on Sep 13

சில மாதங்களுக்கு முன்புதான் படத்தின் இசை வெளியிடப்பட்டது. இதன் ட்ரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படம் சில மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், தியேட்டர்கள் கிடைப்பது, பொருத்தமான நேரம் என பல விஷயங்கள் தள்ளிப் போட்டன.

இப்போது படத்தை ஸ்டுடியோ 9 நிறுவனம் வாங்கியுள்ளது. வரும் செப்டம்பர் 13-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதிலும் வெளியாகிறது.

Shaam's 6 on Sep 13

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X