ஒரு இயக்குநரை நம்பி ஏமாந்துட்டேன்.. நடிகைகளோடு கிசுகிசு.. வலியோடு போராடும் ஷாம்
சென்னை: 12b, உள்ளம் கேட்குமே, இயற்கை போன்ற படங்களின் மூலம் எல்லோருக்கும் பிடித்தமான ஹீரோவாக அறியப்பட்டவர் ஷ்யாம். அலைபாயுதே மாதவன், காதல் தேசம் அப்பாஸ் ரேஞ்சுக்கு பேசப்பட்டார். பெண்களுக்கு பிடித்த ஹீரோவாகவும் வலம் வந்த இவர், வாரிசு படத்தில் விஜய்க்கு அண்ணனாகவும் நடித்திருந்தார். இதனிடையே, சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் வாழ்வில் மறக்க முடியாத வலி என்ன என்பதை பற்றி விளக்கியுள்ளார்.
ஷ்யாம் நடித்த லேசா லேசா போன்ற படங்கள் இளைஞர்களுக்கு பிடித்த சென்டிமென்டான காதல் படமாக இருக்கிறது. இப்போதும் தொலைக்காட்சிகளில் இப்படம் ஒளிபரப்பானால், லேசா லேசா பாடலை கேட்டு மெய்மறந்து போவார்கள், ஏதோ ஒன்று ஏதோ ஒன்று பாடலும் பிடித்த பாடல் வரிசைகளில் உள்ளன. ஷாம் நடித்த படங்களில் பெயர் சொல்லும் அளவிற்கு ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். இவர் செலக்ட் செய்து நடித்த படங்கள் அனைத்தும் கல்லூரி பெண்களை ரசிக்கும் படமாகவே இருந்தன. அடுத்தடுத்து தோல்வி படங்களால் தடுமாற்றத்தை கண்டார்.

சப்போர்ட்டிங் ரோல்: பிறகு தெலுங்கில் ரவிதேஜா, அல்லு அர்ஜூன் போன்ற ஹீரோக்களின் படங்களில் நடித்து தெலுங்கிலும் பிரபலமடைந்தார். ஒரு சில படங்களில் வில்லனாகவும் தோன்றியுள்ளார். தமிழை போன்று தெலுங்கிலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தன. ஆனால், சப்போர்ட்டிங் ரோலாக வர ஷாமுக்கு பிடிக்கவில்லை என அவரே சில பேட்டிகளில் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் இந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
கைது: கடந்த 2020இல் அடுக்குமாடி குடியிருப்பில் சூதாட்டம் நடத்துவதாக வந்த தகவலின் படி போலீசார் ஷ்யாமை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்தது. ஷ்யாம் குறித்தும் தவறான தகவலும் பரவின. அதற்கு அவரும் விளக்கம் கொடுத்திருந்தார். கைது செய்திகளுக்கு பிறகு யூடியூப் சேனல்களில் பேட்டியளித்த ஷ்ம் தனுஷ், சிம்பு போன்ற நடிகர்களின் வருகையால் எனக்கு மார்க்கெட் போனது என்று ஓப்பனாக நெப்போட்டிசத்தை விமர்சித்து பேசியிருந்தார். வாரிசு நடிகர்களை போன்று எனக்கு எளிதில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மறக்க முடியாத வலி: தற்போது அஸ்திரம் படத்தில் ஷ்யாம் நடித்து வருகிறார். இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் இருந்தபோது அவர் அளித்த பேட்டியில் வாழ்வில் மறக்க முடியாத ஒரு வலியை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, சினிமாவில் என்ட்ரி ஆனதும் கிசுகிசு வந்ததும் எனது அம்மாவை ரொம்ப பாதித்தது. ஆனால், நான் அதை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம் என கூறிவிட்டேன். ஆனால், அதைவிட பெரிய வலி என்னன்னா ஒரு இயக்குநரை நம்பி நான் ஃபர்ஸ்ட் காபி என்ற அடிப்படையில் தயாரிப்பாளரிடம் இருந்து மூன்றரை கோடி ஷ்யாம் வாங்கி கொடுத்தாராம். அவரை சுற்றியிருந்தவர்கள் ஷாமை எச்சரித்தனர்.
நான் கேட்கவில்லை, கல்லூரி காட்சியெல்லாம் எனக் கூறி எனது கால்ஷீட்டை வாங்கி வீணடித்து விட்டார்.
ஆனால் படம் எடுக்கும் போது ஏதோ ஏஜென்சியில் வேலை பார்ப்பது போல படமாக்கினார். இதுபற்றி நான் கேட்டபோது அந்த இயக்குநர் பொய் சொல்லி சமாளித்துவிட்டார். நான் கொடுத்த மூன்றரை கோடியில் ஒன்றரை கோடியை அந்த இயக்குனர் வைத்துக் கொண்டார். படத்திற்கு செலவு செய்யவில்லை. இப்படம் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம். சினிமாவிற்கு நான் புதிது என்பதால் அது மறக்க முடியாத வலியாக இருந்தது என அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











