twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'என்னது ஷாருக்கான் போலி முஸ்லிமா?.. கொந்தளித்த பிரபல நடிகை.. டிராலர்களுக்கு நெத்தியடி பதில்!

    போலி முஸ்லிம் என ஷாருக்கான் கேலி செய்யப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி கூறியுள்ளார்.

    |

    மும்பை: போலி முஸ்லிம் என ஷாருக்கான் கேலி செய்யப்படுவதற்கு பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    பிரபல பாலிவுட் நடிகர் தீபாவளி பண்டிகையின் போது வாழ்த்து தெரிவித்து டிவீட் செய்திருந்தார். அதில் அவரும், அவரது மனைவி கவுரி, இளைய மகன் அப்ரம் ஆகிய மூவரும் நெற்றியில் திலகமிட்டிருந்தனர்.

    Shabana Azmi appalled to see Shah Rukh Khan being slammed as a “false Muslim”

    இதை பார்த்த நெட்டிசன்கள் சிலர், உண்மையான முஸ்லிம்கள் யாரும் திலகம் வைக்க மாட்டார்கள் என ஷாருக்கை கடுமையான விமர்சித்தனர். மேலும் ஷாருக்கை 'போலி முஸ்லிம்' எனக் கூறி டிரால் செய்தனர்.

    இதற்கு பிரபல பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவீட் செய்துள்ள அவர், "நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டு தீபாவளி வாழ்த்து கூறியதற்காக ஷாருக்கானை போலி முஸ்லிம் என அழைப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இஸ்லாம் என்ன அவ்வளவு பலகீனமாகிவிட்டதா? கங்கா ஜமுனி தேஜீப்பில் தான் இந்தியாவின் அழகு இருக்கிறது", என தெரிவித்துள்ளார்.

    மறைந்த பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான கைபி ஆஸ்மியின் மகள் தான் ஷபானா. இவர் நூற்றுக்கணக்கான இந்தி படங்களில் நடித்திருக்கிறார். வாட்டர் எனும் படத்தில் மொட்டை அடித்துகொண்டு நடித்தற்காக ஷபானாவை சில முஸ்லிம் அமைப்புகள் ஃப்வத்வா செய்து ஒதுக்கினர். ஆனால் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார் ஷபானா.

    கைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலாகைதி கார்த்தி ட்ரீம் வாரியர்ஸ் எஸ்.ஆர்.பிரபு கூட்டணியின் சக்சஸ் ஃபார்முலா

    அதுபோல் தற்போது ஷாருக்கான் விவகாரத்திலும் டிராலர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் ஷபானா. இந்த விவகாரம் குறித்து முக்கிய நடிகர்கள், இயக்குனர்கள் கூட வாய் திறக்காத நிலையில், ஷாருக்கானுக்கு ஆதரவாக ஷபானா பேசியிருப்பது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    English summary
    Veteran hindi actor Shabana Azmi tweeted that she was appalled to see Shah Rukh Khan being slammed as a “false Muslim” just because he posted a Diwali picture, wearing a tilak.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X