ராஜமௌலி, ரவிவர்மன் என ஆஸ்காருக்கு அழைக்கப்பட்ட இந்திய பிரபலங்கள்.. காரணம் தெரிஞ்சா அசந்துருவீங்க!
கலிபோர்னியா: சர்வதேச அளவில் பல்வேறு திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு அதில் பல்வேறு கலைஞர்களுக்கு, படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டாலும் உலகம் முழுவதும் கவனம் பெற்ற திரைப்பட விழா மற்றும் விருதுகள் என்றால் அது, ஆஸ்கார் திரைப்பட விழாவும் அங்கு கொடுக்கப்படும் விருதுகளும்தான். இந்த திரைப்பட விழாவில் ஒரு வெளிநாட்டுப் படம் திரையிடப்படுகின்றது என்றாலே அதனை மிகவும் பெருமையாக உலக சினிமா அரங்கில் விவாதிக்கப்படும்.
இந்த அளவிற்கு சினிமா உலகில் கவனம் ஈர்த்த ஆஸ்கார் விருதினை கடந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் ஆஸ்கார் விருதினை வென்றது. இதனால் இந்த பாடல் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. பல்வேறு கிரிக்கெட் போட்டிகள்:, கால்பந்து போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் கூட இந்த பாடல் ஒளிபரப்பப் பட்டது. இந்த பாடலுக்காக ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கார் விருது எனது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

இப்படியான நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆஸ்கார் அகாடெமி மிகத் தீவிரமாக செயலாற்றி வருகின்றது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆஸ்கார் அகாடெமியின் உறுப்பினர்களாக செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதில் இருந்து மொத்தம் 57 நாடுகளில் 487 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் 44 சதவீத்திற்கும் மேற்பட்டோர் பெண்கள் எனவும் ஆஸ்கார் அகாடெமியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரபலங்கள்: அதன் அடிப்படையில் இந்தியாவில் இருந்தும் பல்வேறு கலைஞர்களை ஆஸ்கர் அகாடெமியில் உறுப்பினராக இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில், " ஆர்.ஆர்.ஆர். படத்தினை இயக்கி உலகப்புகழ் பெற்ற இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, ஆர்.ஆர்.ஆர். படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் மனைவி ரமா ராஜமௌலி, ஆஸ்கார் விருதினை வென்ற பாடலான நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரஷித் மற்றும் தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரவி வர்மன்: இதில் ராஜமௌலி இயக்குநர் பிரிவிலும், அவரது மனைவி ஆடை வடிவமைப்பாளர் பிரிவிலும் அழைக்கப்பட்டுள்ளனர். நாட்டு நாட்டு பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரஷித் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் பிரிவில் உறுப்பினராக செயல்பட அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஜப்பான் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் ஒளிப்பதிவாளராக செயல்பட்ட ரவி வர்மனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திரைப்படத் தயாரிப்பாளர் ரீமா தாஸ் (டோராவின் கணவர், வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்), இந்தியாவில் பிறந்த கனேடிய திரைப்படத் தயாரிப்பாளர் நிஷா பஹுஜா ஆகியோர்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிஷா பஹுஜா ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆவணப்படமான டு கில் ஆவணப்படத்திற்காக புகழ் பெற்றவர்.

மகிழ்ச்சியில் ஆஸ்கார்: இவர்கள் மட்டும் இல்லாமல் ஐந்து முறை தேசிய விருது பெற்ற நடிகையான ஷபானா ஆஸ்மி நடிகர்கள் பிரிவில் உறுப்பினராகச் செயல்பட அழைக்கப்பட்டுள்ளார். இம்முறை ஆஸ்கார் அகாடெமியின் தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் அகாடெமியின் தலைவர் ஜேனட் யாங் ஆகியோர் இந்த ஆண்டு புதிய உறுப்பினர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகெங்கிலும் உள்ள இந்த குறிப்பிடத்தக்க திறமையான கலைஞர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் திரைப்படத் தயாரிப்பில் உலகம் முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்."

பெண்களுக்கு முக்கியத்துவம்: மேலும் இது தொடர்பான அறிவிப்பில், 2024 ஆண்டுக்கான உறுப்பினர்களில் 44 சதவீதத்தினர் பெண்கள், 41 சதவீதத்தினர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், 56 சதவீத உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள 56 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து அதிகப்படியான கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் இந்திய திரையுலகமே இந்த விஷயம் தொடர்பாக தீவிரமாக பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











