வாத்தி கம்மிங் பாடலுக்கு இடியாப்ப பரம்பரை ஸ்டைலில் 'குத்து' ஆட்டம் போட்ட டான்ஸிங் ரோஸ்!

சென்னை: வாத்தி கம்மிங் பாடலுக்கு இடியாப்ப பரம்பரையின் டான்ஸிங் ரோஸ் தனது ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இப்படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்தனர்.

இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரப்பேற்பை பெற்று, பாராட்டுக்களை குவித்தது. படத்தில் ஹீரோ முதல் கடைசி நடிகர் வரை ஒவ்வொரு கதாப்பாத்திரமும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.

ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி

ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி

கபிலனாக நடித்த ஆர்யா, வேம்புலியாக நடித்த ஜான் கோக்கன், டான்ஸிங் ரோஸாக நடித்த ஷபீர் கல்லரக்கல் டாடி கதாப்பாத்திரத்தில் நடித்த ஜான் விஜய், ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி என பலரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

பெரும் வரவேற்பு - பாராட்டும் நெட்டிசன்ஸ்

பெரும் வரவேற்பு - பாராட்டும் நெட்டிசன்ஸ்

இதனால் சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரப்வேற்பை பெற்றது. நல்ல விமர்சனங்களையும் பெற்றது. ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் படத்தை பாராட்டி வருகின்றனர். படம் வெளியாகி ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் இன்னமும் படம் குறித்த சுவாரசிய தகவல்கள் நாள்தோறும் வெளியான வண்ணம் உள்ளன.

டான்ஸிங் ரோஸுக்கு ரசிகர் பட்டாளம்

டான்ஸிங் ரோஸுக்கு ரசிகர் பட்டாளம்

அதிலும் குறிப்பாக டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் கல்லரக்கலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது. எதிர் அணியாக இருந்த போதும் ஒரு நேர்மையுடன் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் டான்ஸிங் ரோஸ்.

பக்கா பர்ஃபாமன்ஸை காட்டி அப்ளாஸை அள்ளி

பக்கா பர்ஃபாமன்ஸை காட்டி அப்ளாஸை அள்ளி

கபிலனிடம் சண்டைக்கு வரியா என நக்கலாக பேசி வாக்குவாதம் செய்யும் காட்சி ரிங்குக்குள் அடி வாங்கி விட்டு அதனை வேம்புலியிடம் செய்து காட்டும் காட்சி என கிடைத்த வாய்ப்பில் பக்கா பர்ஃபாமன்ஸை காட்டி அப்ளாஸை அள்ளினார் டான்ஸிங் ரோஸான ஷபீர் கல்லரக்ககல்.

விளையாட்டில் நியாயம் இருக்க வேண்டும்

விளையாட்டில் நியாயம் இருக்க வேண்டும்

அதேபோல் வேம்புலிக்கும் கபிலனுக்கும் இடையிலான முதல் மோதலின் போது தணிகா அடியாட்களை இறக்கி மேட்சை கலைக்கும் போது வெட்கமா இல்லையா என வேம்புலியை திட்டி ஆர்யா ரசிகர்களையும் கவர்ந்தார். இதேபோல் வேம்புலி கபிலனிடம் அடி வாங்கி தோற்ற போதும் இதுதான் வெற்றி என்று விளையாட்டில் நியாயம் இருக்க வேண்டும் என்று வசனம் பேசி விளையாட்டில் தனக்கு உள்ள நேர்மையை காட்டுவார்.

மக்கள் மனதில் ஸ்ட்ராங்கான டான்ஸிங் ரோஸ்

மக்கள் மனதில் ஸ்ட்ராங்கான டான்ஸிங் ரோஸ்

டான்ஸிங் ரோஸ் பாத்திரம் இங்கிலாந்தை சேர்ந்த புகழ் பெற்ற பாக்ஸர் நசீம் ஹமீத்தை மையப்படுத்தி உருவானது. ரிங்குக்குள் நசீம் ஹமீத்தின் ஒவ்வொரு அசைவும் நடனத்தைப் போலவே இருக்கும். தன் கால் அசைவுகளுக்காகவே பெரும் புகழைப் பெற்றவர் நசீம் ஹமீத். அவரது வீடியோக்களை பார்த்தே இந்த உடல் மொழியை கொண்டு வந்ததாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஷபீர்.

ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள ஷபீர்

ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ள ஷபீர்

ஷபீர் கல்லரக்கல் சினிமாவுக்கு புதியவர் அல்ல. 2014 ஆம் ஆண்டு வெளியான "நெருங்கி வா முத்தமிடாதே" படம் மூலம் நடிகராக அறிமுகமானவர். ரஜினி காந்தின் பேட்ட, ஆர்யாவின் டெடி, ஜெயம் ரவியின் அடங்கமறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்.

பல இடங்களில் பயன்படும் பஞ்ச் காட்சி

பல இடங்களில் பயன்படும் பஞ்ச் காட்சி

தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் ஷபீர் கல்லரக்கல். ஷபீர் கல்லரக்கல் சார்பாட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவிடம் பஞ்ச் வாங்கும் காட்சியை பல சம்பவங்களுக்கு நெட்டிசன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மாஸ் காட்சியை கொண்டாடும் துணை கமிஷனர்

மாஸ் காட்சியை கொண்டாடும் துணை கமிஷனர்

அந்த வகையில் திருப்பூர் போலீசார் 11 டன் குட்காவை பறிமுதல் செய்த வழக்கில் கபிலனிடம் டான்ஸிங் ரோஸ் பஞ்ச் வாங்கும் மாஸ் காட்சி மீம்ஸை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு கொண்டாடியுள்ளார் அம்மாவட்ட துணை கமிஷனர்.

இடியாப்ப பரம்பரை ஸ்டைலில் ஆட்டம்

இடியாப்ப பரம்பரை ஸ்டைலில் ஆட்டம்

இந்நிலையில் டான்ஸிங் ரோஸ் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு பல்டி, பஞ்ச் என தனது இடியாப்ப பரம்பரை ஸ்டைலில் ஆட்டம் போட்டுள்ளார். ஒவ்வொரு ஸ்டெப்பிலும் பாக்ஸிங் மூவ்மென்ட் வித்தைகளை காட்டியுள்ளார் ஷபீர் கல்லரக்கல். ஷபீர் கல்லரக்கலின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. விஜய் ரசிர்களும் ஷபீர் கல்லரக்கலின் இந்த வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X