கோச்சடையான் இசை வெளியீடு... ஷாரூக்கானும் வருகிறார்!!
சென்னை: நாளை மறுநாள் சென்னையில் நடக்கவிருக்கும் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் ஷாரூக்கானும் பங்கேற்கிறார்.
ரஜினியின் கோச்சடையான் இசை வெளியீட்டு விழாதான் இப்போது இந்திய திரையுலகமே பெரிதும் எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

அமிதாப்
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமிதாப் பச்சன் பங்கேற்பார் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தனர். எந்திரன் இந்திப் பதிப்பின் இசை வெளியீட்டு விழாவில் அமிதாப் கலந்து கொண்டு சிறப்பித்தது நினைவிருக்கலாம்.

ஷாரூக்கும்?
இப்போது ஷாரூக்கானும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஷாரூக்கானின் ரா ஒன் இசை வெளியீடு சென்னையில் நடந்தபோது, சவுந்தர்யா நேரில் பங்கேற்றார். பின்னர் ரஜினியை நேரில் சந்தித்து ஷாரூக் வாழ்த்துப் பெற்றது நினைவிருக்கலாம்.

சவுந்தர்யா அழைப்பு
ஷாரூக்கானை அழைத்திருப்பது குறித்து சவுந்தர்யாவும் உறுதிப்படுத்தியுள்ளார். "கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவுக்கு வருமாறு ஷாரூக்கை அழைத்துள்ளேன். என்னுடைய முதல் படம்... எனவே கண்டிப்பாக வருவதாகக் கூறியுள்ளார்," என்றார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த விழாவில் பங்கேற்கும் விவிஐபிகள் எண்ணிக்கை பெரிதாகிக் கொண்டே போவதால், பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தெலுங்கில்..
தெலுங்குப் பதிப்பான விக்ரமசிம்ஹா படத்தின் இசை தனியாக வெளியிடப்படும். ஹைதராபாதில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











