பக்கத்து வீட்டுல தூங்குறாங்க.. சத்தம் போடாம வாழ்த்து சொல்லுங்க.. இதுதாங்க ஷாருக்கான்!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நள்ளிரவிலே ஷாருக்கானின் மன்னத் பங்களாவுக்கு முன் குவிந்து வாழ்த்து கூறினர்.

Recommended Video

Shahrukh Khan 54th birthday celebration at Mannat | ஷாருக்கானின் 54வது பிறந்த நாள்

மும்பை: பாலிவுட் பாட்ஷா, ரசிகர்களின் ரசிகன் ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் ஹேப்பி பர்த்டே ஷாருக்கான் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ரசிகர்கள், பிரபலங்கள் என உலகின் பல பகுதிகளில் இருந்தும் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

டாக்டர் ஷாருக்கான்

டாக்டர் ஷாருக்கான்

நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்த ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி லண்டன் சட்ட பல்கலைகழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பும், எடின்பர்க் பல்கலைகழகம் மற்றும் பெட்ஃபோர்ட்ஷைர் பல்கலைகழகங்கள் ஷாருக்கானுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

80 படங்கள்

80 படங்கள்

பாலிவுட் பாட்ஷா, கிங் ஆஃப் பாலிவுட், கிங் கான் உள்ளிட்ட பல பட்டங்களை ரசிகர்கள் மூலம் பெற்றுள்ள ஷாருக்கான், 1992ம் ஆண்டு வெளியான தீவானா படத்தின் மூலம் அறிமுகமானார். 1993ம் ஆண்டு வெளியான பாஸிகர் திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதுவரை 80 பாலிவுட் படங்களிலும், 3 பிற மொழி படங்களிலும் ஷாருக்கான் நடித்துள்ளார்.

கோலிவுட் ரசிகர்கள்

கோலிவுட் ரசிகர்கள்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானுக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவான தில்சே படம் தமிழில் உயிரே என டப் செய்யப்பட்டு வெளியானது. அந்த படத்தை பார்த்த பல ரசிகர்கள் ஷாருக்கானுக்கு தீவிர ஃபேன் ஆகிவிட்டனர். மேலும், கமல்ஹாசனின் ஹேராம் படத்திலும் முக்கியமான ரோலில் ஷாருக்கான் நடித்திருந்தார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம், மீண்டும் தமிழ் ரசிகர்களை குஷி படுத்தினார் ஷாருக்கான்.

நள்ளிரவு கொண்டாட்டம்

நள்ளிரவு கொண்டாட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 54வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் அன்று, ரசிகர்கள் ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு கூடி நின்று ஷாருக்கானை நேரில் பார்த்து வாழ்த்துகளை தெரிவிப்பார்கள்.

ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஃபேன் படத்திலும் அந்த காட்சி படமாக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், நேற்று இரவு 12 மணிக்கு கொட்டும் மழையிலும் ஷாருக்கான் வீட்டுக்கு முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். 12 மணியை கடந்த நிலையில், ரசிகர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார் ஷாருக்கான்.

சத்தம் போடாதீங்க

சத்தம் போடாதீங்க

நள்ளிரவு நேரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி ஷாருக்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, அவர்களை சந்தித்த ஷாருக்கான், பக்கத்து வீட்டில் எல்லாம் ஆட்கள் தூங்குறாங்க, அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம சத்தத்தை குறைத்துக் கொண்டு வாழ்த்துகள் கூறுங்கள் என்றார். அவரது இந்த செய்கையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சங்கி

சங்கி

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்திற்கு சங்கி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு இந்தியளவில் டிரெண்டானது. ஷாருக்கானின் பிறந்த நாளை முன்னிட்டு அதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X