அருமையான 30 நாள்..ரஜினியின் ஆசிர்வாதம்..அனிருத்தின் பார்ட்டி.. ட்விட்டரில் நெகிழ்ந்த ஷாருக்கான்!
சென்னை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் மாஸ் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜவான் படத்தின் முக்கியமான ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன.

ஷாருக்கான்
கோலிவுட்டில் மாஸ் ஹிட் திரைப்படங்களை கொடுத்த அட்லி தற்போது பாலிவுட்டில் தனது பாதத்தை பதிக்க பக்காவாக பிளான் போட்டு ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாருக்கான் தந்தை, மகன் என இரண்டு விதமான ரோலில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது, அதில் ஹாலிவுட் ரேன்ஜூக்கு முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ரசிகர்களை அலறவிட்டிருந்தார் ஷாருக்கன்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினி
ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆரில் உள்ள ஆதித்ய ராம் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. அதே இடத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜவான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஷாருக்கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

அருமையான 30 நாள்
இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் , இந்த ஒரு மாதம் தனது படக்குழுவினருக்கு அருமையான 30 நாள். தலைவர் ரஜினிகாந்த் தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது ஆசீர்வதித்தார். நயன்தாராவுடன் படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியுடன் உரையாடல், அட்லி மற்றும் மனைவி பிரியா அட்லியின் அருமையான விருந்து அனைத்துமே சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிக்கன் 65 செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
ஜீரோ படத்திற்கு பிறகு ஷாருக்கானின் படங்கள் எதுவும் வெளியாகததால் ரசிகர் பதான் படத்தையும், ஜவான் படத்தையும் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். ஜவான் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா இந்தியில் அறிமுகமாகிறார் என்றாலும், நயனை இந்திக்குக் கொண்டு சென்ற பெருமை மோகன் ராஜாவுக்கு உண்டு. இவர் சிரஞ்சீவியை வைத்து இயக்கிய காட்ஃபாதர் படத்தில் சல்மான்கான் மெயின் ரோலில் நடித்துள்ளார். இந்தி - தெலுங்கில் உருவான காட் ஃபாதர் அக்டோபர் 5ந் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











