கையை பிடித்து இழுத்த நபர்..திரும்பிப் பார்த்து முறைத்த ஷாருக்கான்..விமான நிலையத்தில் சலசலப்பு!
மும்பை : மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கானுடன் புகைப்படம் எடுப்பதற்காக ரசிகர் ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நயன்தாரா,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

ஷாருக்கான்
பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. திட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக்கானின் எந்த திரைப்படங்களும் வெளியாகாததால் அவரின் படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் மிரட்டியது.

5 மொழிகளில்
அந்த டீசரில், ஷாருக்கான் முகத்தை பாதி மூடிய நிலையில் ரத்தக் காயங்களுடன் பழமையான இடத்தில் ஆக்ஷனுக்கு தயாராவது போன்ற டைட்டில் டீசர் வெளியாகி இருந்தது. அடுத்த ஆண்டு வருடம் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியாக உள்ளது.

கேமியோ ரோலில்
இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார், அதே நேரத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகனாக ஒரு கதாபாத்திரத்திலும் கேங் ஸ்டராக மற்றொரு வேடத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், தீபிகா படுகோனே மற்றும் விஜய் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

கையை பிடித்து இழுத்த நபர்
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கான் தனது மகன்கள் ஆர்யன் கான் மற்றும் அப்ராம் கான் ஆகியோருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு நபர் அவருடன் செல்ஃபி எடுக்க அவரது கையை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்தார் இதனால்,கோபமடைந்த ஷாருக்கான் அந்த நபரை பார்த்து முறைத்தார். இதனால், அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பானது. இதையடுத்து ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தனது அப்பாவை சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.


Click it and Unblock the Notifications











