Shah Rukh Khan: செல்ஃபி.. சிவகுமாராக மாறிய ஷாருக்கான்.. பறந்து போய் விழுந்த ஸ்மார்ட் போன்!
சென்னை: ரசிகர்களை உற்சாகப்படுத்துவதில் ஷாருக்கானை போல ஒரு நடிகர் இந்தியாவில் பார்க்கவே முடியாது. ஆண்டுதோறும் தனது பிறந்தநாள், ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும் தனது வீட்டின் பால்கனியில் இருந்து பல ஆயிரம் ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் ஷாருக்கான்.
ஷாருக்கான் ஒரு ரசிகரை அசிங்கப்படுத்த அந்த ரசிகர் ஷாருக்கானை பழிவாங்குவது போன்ற கதையுடன் Fan என்கிற படத்தில் ஹீரோவாகவும் ரசிகராகவும் நடித்திருந்தவர் ஷாருக்கான்.
இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் ஒரு செகண்ட் சிவகுமாராக மாறி செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் போனை பறக்கவிட்டுள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி படப்பிடிப்பை முடித்து விட்டு: பதான் படத்தின் இமாலய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து அட்லீயுடன் ஜவான் மற்றும் ராஜ்குமார் ஹிரானியுடன் டன்கி என இரு படங்களில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.
தோஹாவில் டன்கி ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், அதனை முடித்து விட்டு நேற்று இரவு மும்பை திரும்பிய போது விமான நிலையத்தில் ஷாருக்கானை சுற்றிலும் ரசிகர்கள் சூழ்ந்துக் கொண்டனர்.

சிவகுமாராக மாறிய ஷாருக்கான்: எப்போதுமே ரசிகர்களை பார்த்தால் செம ஹேப்பியாக கையசைத்தும் செல்ஃபிக்களுக்கு போஸ் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்த ஷாருக்கான் திடீரென மும்பை விமான நிலையத்தில் பழம்பெரும் நடிகர் சிவகுமார் போல சீரியஸ் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வந்து கொண்டிருந்த போது என்ன டென்ஷனில் ஷாருக்கான் இருந்தாரோ தெரியவில்லை. அவர் அருகே அனுமதியின்றி வந்து செல்ஃபி எடுக்க நினைத்த ரசிகரின் செல்ஃபோன் ஒரே தட்டில் பறந்து கீழே விழுந்தது.
ரசிகரை முறைத்த ஷாருக்கான்: விமான நிலையத்தில் அனுமதி பெறாமல் திடீரென செல்போனை எடுத்து ஷாருக்கான் முன்பாக நீட்டி செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் செல்போனை தட்டி விட்ட ஷாருக்கான் திரும்பிப் பார்த்து அவரை முறைத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
இதற்கு முன்னதாக இதுபோல நடிகர் ஷாருக்கான் கோபப்பட்டதே கிடையாதே? ஏன் திடீரென இந்த அளவுக்கு கோபப்பட்டு விட்டார் என்றும் என்ன டென்ஷனில் இருந்தாரோ ஷாருக்கான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ரசிகர்கள் பிரபலங்களை பார்த்ததும் செல்போனை தூக்கிக் கொண்டு அருகே ஓடுவதற்கு முன்பாக குறைந்தபட்சம் அவர்களின் அனுமதியை பெற வேண்டும் இல்லையென்றால், புது போன் வாங்க காசு ரெடி பண்ணிட்டு கிளம்புங்க என நெட்டிசன்கள் கலாய்த்துவ் அருகின்றனர்.
எல்லாம் சினிமாவில் மட்டும் தான்: ஷாருக்கான் நடித்த ஃபேன் படத்தின் கதையை போலவே மலையாளத்தில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் படத்தை சமீபத்தில் அக்ஷய் குமார் செல்ஃபி என ரீமேக் செய்து நடித்திருந்தார்.
அந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் ஒரே நேரத்தில் செல்ஃபிக்களை எடுத்து கின்னஸ் சாதனை படைத்தார்.
பெரிய பிரபலங்கள் முறைத்து விட்டாலோ இப்படி உதாசினப்படுத்தினாலோ அவர்களை பழிவாங்குவது என்பதெல்லாம் வெறும் சினிமாவில் மட்டும் தான் நடக்கும். நிஜத்தில் ஒண்ணுமே பண்ண முடியாது என்பதால் தான் அவர்கள் இப்படி முரட்டுத் தனமாக நடந்துக் கொள்கின்றனர் என விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











