ஜவான் படத்துல ஷாருக்கிற்கு 6 லுக்கா.. படத்தோட அப்டேட் சொன்ன படக்குழு!

மும்பை : பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாடப்படும் ஷாருக்கான் நடிப்பில் பதான் படம் வெளியாகி சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படம் வரும் ஜூன் மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கவுள்ளது.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்

பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ஷாருக்கான். தன்னுடைய துருதுரு நடிப்பால் இவர் ரகிர்களை கவர்ந்து வருகிறார். இவரது மாஸ் படங்கள் ரசிகர்களை கட்டிப்போட்டு, இவரது ரசிகர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்ள வைத்து வருகின்றன.

பதான் படம்

பதான் படம்

தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்துவந்த ஷாருக்கான், தன்னுடைய சொந்த பிரச்சினைகள் மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு இவரது பதான் படம் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

இந்திய அளவில் பான் இந்தியா படமாக பதான் படம் வெளியாகியுள்ள நிலையில், திரையடப்பட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. சர்வதேச அளவில் 900 கோடி ரூபாய் வசூலை எட்டவுள்ளது. படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில், சல்மான் கானும் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

ரிலீசுக்கு தயாராகும் ஜவான் படம்

ரிலீசுக்கு தயாராகும் ஜவான் படம்

பதான் படத்தின் அதிரடி வெற்றியை தொடர்ந்து ஷாருக்கானின் ஜவான் படம் அட்லீ இயக்கத்தில் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள நிலையில் நடிகர் விஜய்யும் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இறுதிக்கட்டத்தில் சூட்டிங்

இறுதிக்கட்டத்தில் சூட்டிங்

இந்நிலையில் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் இன்னும் 20 -30 நாட்கள் மட்டுமே ஷுட்டிங் மீதமுள்ளதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானின் போர்ஷன்கள் அனைத்தும் மும்பையிலேயே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கிற்கு 6 லுக்

ஷாருக்கிற்கு 6 லுக்

படத்தின் சேஸ் காட்சிகள் எப்எப்7 ஸ்டண்ட் டீமால் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த காட்சிகள் விரைவில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஷாருக்கானின் இளவயது கேரக்டர் 6 லுக்கை கொண்டுள்ளதாகவும் மேலும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ஷாருக்கின் தோழியாக நயன்தாரா நடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X