SRK - விஜய்சேதுபதி - அல்லு அர்ஜுன்... அட்லீயின் ஜவான் பாக்ஸ் ஆபிஸ் Prediction இத்தனை கோடியா?

மும்பை: பாலிவுட் சூப்பர் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

சித்தார்த் ஆனாந்த் இயக்கியுள்ள பதான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் ஜவான் திரைப்படம் ஜூன் 2ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துவரும் நிலையில், இப்போதே பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த கணிப்புகள் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.

 எதிர்பார்ப்பில் ஜவான்

எதிர்பார்ப்பில் ஜவான்

ஷாருக்கான் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பதான் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது. நெட்டிசன்களின் பாய்காட் பிரசாரங்களை கடந்து ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலித்து மாஸ் காட்டியுள்ளது பதான். இதனால் ஷாருக்கான் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள ஜவான் திரைப்படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஷாருக்கான் தனது ரெட் சில்லர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் இந்தப் படத்தை கோலிவுட் இயக்குநர் அட்லீ இயக்கி வருகிறார்.

 விஜய்க்கு பதிலாக அல்லு அர்ஜுன்

விஜய்க்கு பதிலாக அல்லு அர்ஜுன்

ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், கேமியோ ரோலில் தீபிகா படுகோனேவும் நடித்து வருகின்றனர். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியும், முக்கியமான கேரக்டர்களில் ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. ஜவான் படத்தில் கோலிவுட் வசூல் கிங் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அவருக்கு பதிலாக அல்லு அர்ஜுன் நடிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 ஜவான் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு

ஜவான் பாக்ஸ் ஆபிஸ் கணிப்பு

கோலிவுட்டில் விஜய் - அட்லீ காம்போ ரசிகர்களின் பேவரைட் என்றே சொல்லலாம். எனவே ஷாருக்கானின் ஜவான் படத்தில் விஜய்க்கு ஒரு மாஸ் என்ட்ரி கொடுக்க அட்லீ நினைத்திருந்தார். ஆனால், விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டதால், ஜவானில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இதனையடுத்து தான் புஷ்பா ஹீரோ அல்லு அர்ஜுனை கமிட் செய்யவுள்ளாராம் அட்லீ. இதனால், இப்போதே ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் எப்படி இருக்கும் என கணிப்பு வெளியாகியுள்ளது.

 அட்லீயின் சூப்பர் கால்குலேஷன்

அட்லீயின் சூப்பர் கால்குலேஷன்

பதான் படம் மூலம் ஷாருக்கான் வெறித்தனமான கம்பேக் கொடுத்துவிட்டார். இன்னொரு பக்கம் ஜவான் படத்தின் வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதி வெயிட் காட்டி வருகிறார். அதோடு அல்லு அர்ஜுனும் இணைந்துவிட்டால் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என மொத்தமாக கவர் செய்துவிடலாம். ஷாருக்கான், விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுன் மூவருமே பான் இந்தியா ஸ்டார்ஸ் என்பதால், ஜவான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 1500 கோடி வரை கிடைக்கும் என கணக்குப் போட்டுள்ளாராம்.

 டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஜவான்

டிவிட்டரில் ட்ரெண்டாகும் ஜவான்

ஜவான் படத்தின் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஷாருக்கான், விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுன் காம்போ இணைந்துவிட்டால், 1500 கோடி வசூல் கன்ஃபார்ம் என்றே சொல்லப்படுகிறது. இந்தியில் 600 கோடி வரையும், தமிழில் 100 கோடி, தெலுங்கில் 150 கோடி, இந்தியா முழுவதும் 850 கோடி, மற்ற நாடுகளில் 500 கோடிக்கும் மேல் என மொத்தம் 1500 முதல் 1600 கோடி வரை வசூலிக்கும் என பட்டியலிட்டு நெட்டிசன்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X