இது ரியலா? ரூமரா? ஷாருக்கானை ’சங்கி’ ஆக்கும் அட்லி?

பிகில் படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானை அட்லி இயக்கவுள்ளார். அந்த படத்திற்கு SANKI என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் 200 கோடி வசூலை தாண்டியுள்ளது.

இந்நிலையில், ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கவுள்ள புதிய படத்திற்கு SANKI என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தற்போது ட்விட்டரில், SANKI என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்த நாளன்று வெளியாகும் என்ற தகவலும் வைரலாகி வருகிறது.

சூசகம்

சூசகம்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை பார்த்த பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர், பிகில் திரைப்படத்தை எமோஷனல் ரோலர் கோஸ்டர் என்றும், அட்லியை சூப்பர்ஸ்டார் இயக்குநர் என்றும் பாராட்டினார். விஜய்க்கு பிறகு ஷாருக்கானை அட்லி இயக்கவுள்ளதையே சூசகமாக கரண் ஜோஹர் சொல்லி உள்ளாரோ என்னவோ? எதுவாக இருந்தாலும் சீக்கிரமே தெரிந்துவிடும்.

டிரெண்டிங்

டிரெண்டிங்

சென்னை டிரெண்டிங்கில் முதலிடத்திலும், இந்தியளவில் 5ம் இடத்திலும் Sanki ஹாஷ்டேக் இடம்பிடித்துள்ளது. வேகமாக இந்தியளவில் முதலிடத்தையும் இந்த ஹாஷ்டேக் விஜய் ரசிகர்களால் அடைவது சாத்தியமான ஒன்று தான். நவம்பர் 2ம் தேதி ஷாருக்கான் பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள Sanki படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வைரலாகி வருகிறது.

நம்பலாமா? வேணாமா?

நம்பலாமா? வேணாமா?

மெர்சல், விக்ரம் வேதா, சமீபத்தில் வெளியான அசுரன் உள்ளிட்ட படங்களின் ரீமேக்கில் ஷாருக்கான் நடிக்கப்போவதாக பல வதந்திகள் செய்திகளாகவே உலா வந்தன. இந்நிலையில், தற்போது Sanki ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பல பிரபல சினிமா வர்த்தகர்களும் இந்த தகவலை ஷேர் செய்து வருகின்றனர். ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவலை இயக்குநர் அட்லியோ அல்லது ஷாருக்கான் தரப்போ வெளியிடவில்லை. நவம்பர் 2ம் தேதிக்கு இடையே நாளை ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல் கிட்டத்தட்ட உறுதியான ஒன்றாகவே கருதப்படுகிறது.

தொடங்கியது டிரோல்

சங்கி என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வரும் நிலையில், அட்லியின் ஹேட்டர்ஸ்கள், சங்கி மங்கி என்ற மீம்ஸையும், ஷாருக்கானை சங்கி ஆக்கப்போகிறார் அட்லி என்றும் டிரோல் செய்து வருகின்றனர். ஆனால், அட்லிக்கு பக்கபலமாக விஜய் ரசிகர்களும், ஷாருக்கான் ரசிகர்களும் Sanki என்ற வார்த்தைக்கான அர்த்தங்களை தேடி கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றனர். Sanki என்றால் 'சாதாரணமானவன் அல்ல' என்று அர்த்தமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X