கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்

By Siva

மும்பை: ஷாருக்கான் நடிக்க வந்து 27 ஆண்டுகள் ஆனதை அவரின் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

பாலிவுட்டை பல காலமாக ஆண்டு வருபவர்கள் 3 கான்கள். அவர்கள் தான் ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான். இதில் ஷாருக்கான் மட்டுமே சினிமா பின்னணி இல்லாமல் வந்து வெற்றி பெற்றவர்.

Shah Rukh Khan completes 27 years in Bollywood

சின்னத்திரையில் அறிமுகமாகி பெரிய திரைக்கு வந்து வெற்றிக் கொடி கட்டியவர் ஷாருக்கான். ஷாருக்கான் நடிக்க வந்து 27 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஷாருக்கானின் இந்த சாதனை குறித்து ட்வீட் செய்து #27GoldenYearsOfSRK என்கிற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரெண்டாக விட்டுள்ளனர் ரசிகர்கள்.

#27GoldenYearsOfSRK என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் 6வது இடத்திலும் டிரெண்டானது. கோலிவுட்டில் இருக்கும் அந்த இரண்டு பேரின் ரசிகர்கள் மட்டும் அல்ல ஷாருக்கானின் ரசிகர்களும் ட்விட்டர் டிரெண்டில் கில்லாடிகள் தான்.

தீவானா படம் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்த ஷாருக்கான் இன்னும் தொடர்ந்து ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜீரோ படம் சரியாக ஓடவில்லை. அதனால் புதுப் படங்களை ஒப்புக் கொள்வதில் அவர் அவசரம் காட்ட விரும்பவில்லை.

இந்நிலையில் தான் ரசிகர்கள் அவரின் 27 ஆண்டு கால சாதனைகளை நேற்றில் இருந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல் தனது ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் மற்றும் மகள் சுஹானா ஆகியோரும் தந்தை வழியில் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளனர்.

கையில் காசு இல்லாமல் பசியுடன் மும்பையில் சுற்றிய ஷாருக்கான் இன்று பெரும் பணக்கார நடிகர் ஆவார். அதற்கு அவரின் கடின உழைப்பு மட்டுமே காரணம் என்கிறார்கள் ரசிகர்கள். பிறந்தநாள், ரம்ஜான் என்றால் ரசிகர்கள் ஷாருக்கானின் பங்களாவான மன்னத் முன்பு கூடிவிடுவார்கள். ஷாருக்கான் வந்து கையசைப்பதை பார்க்கவே அப்படி அவ்வப்போது கூடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X