Suhana khan: விவசாயியாக மாறிய ஷாருக்கான் மகள்.. எவ்வளவு ஏக்கருக்கு சொந்தக்காரர் தெரியுமா?

மும்பை: நடிகர் ஷாருக்கான் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர். தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாருக்கானின் பதான் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் தற்போது The Archies என்ற படம் மூலம் பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.

ஷாருக்கான் மகள் வாங்கிய விவசாய நிலம்: நடிகர் ஷாருக்கான், தன்னுடைய மகன் விவகாரம் உள்ளிட்டவற்றால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார். நீண்ட காலங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதான் படம் வெளியானது. சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. வசூல் சாதனையும் புரிந்தது. இந்தப் படத்தில் நடிகை தீபிகா படுகோன் ஷாருக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

Shah rukh khan daughter Suhana khans farmland makes controversies

இந்நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, யோகிபாபு, பிரியா மணி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷாருக்கானின் மகள் சுஹானா கானும் தற்போது பாலிவுட்டில் நாயகியாக களமிறங்கியுள்ளார். The Archies என்ற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். 23 வயதாகும் சுஹானா, மகாராஷ்டிராவின் அலிபாக் தீவு டவுனில் 1.5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளாராம். அந்த நிலத்தில் அவருக்கு 2218 சதுர அடிக்கு வீடும் உள்ளதாம். ஏறக்குறைய 13 கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை அவர் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பத்திரத்தில்தான் தன்னை விவசாயி என்று குறிப்பிட்டுள்ளார் சுஹானா. இந்நிலையில் அவர் அங்கே விவசாயம் செய்யப் போகிறாரா என்று இணையதளத்தில் விமர்சனங்கள் மற்றும் கலாய்ப்புகள் நடந்து வருகின்றன. இதனிடையே தான் நடித்துவரும் படத்திற்காக பல நடனக்கலைகளை கற்றுத் தேர்ந்து வருகிறார் சுஹானா. இங்கிலாந்தில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த கையோடு, நியூயார்க்கில் இவர் நடிப்பு மற்றும் நாடகத்திற்கான பயிற்சியையும் முடித்துள்ளார்.

தான் பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்னதாக தன்னை அதற்காக முழுவீச்சில் தயார் படுத்திக் கொள்ளும்வகையில் சுஹானா அடுத்தடுத்த பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் ஆர்ச்சிஸ் படத்தின் சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படம் 1960களில் நடைபெறும் மியூசிகல் படமாக உருவாகி வருகிறது. நெட்பிளிக்சில் படம் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X