அம்பானி வீட்டு கல்யாணம்னா சும்மாவா.. ஒன்று கூடிய பிரபலங்கள்.. களைகட்டிய ப்ரீ வெட்டிங்!

மும்பை: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மூன்று நாள் ப்ரீ வெட்டிங் விழா குஜராத்தில் நேற்று தொடங்கியது. ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த விழாவுக்கு சுமார் 2,000 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விழாவில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நேற்று முதல், மார்ச் 3 ஆம் தேதி வரை ப்ரீ வெட்டிங் நடைபெற உள்ளது. இதன் காரணமாக குஜராத்தின் ஜாம் நகர் பகுதியில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,000 ஏக்கர் பரப்பளவில் காடுகள் சரிசெய்யப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. 2,500 உணவு வகைகளுடன் ப்ரீ வெட்டி கோலாகலமாக நடந்து வருகிறது.

ShahRukhKhanDeepikaPadukoneandRanveerSinghattendAnantAmbaniandRadhikaMerchantpre-weddingfestivities

ப்ரீ வெட்டிங் போட்டோ: வெள்ளிக்கிழமையான நேற்றிரவு காக்டெய்ல் பார்ட்டி நடைபெற்றது. இதில், பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். பாலிவுட்டின் ஸ்டார் ஷாருக்கான் கருப்பு நிற பிளேசர் மற்றும் பேன்ட் அணிந்திருந்தார். மேலும், கழுத்தில் செயினை அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்திருந்தார். மேலும் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான அட்லீ தனது மனைவி பிரியா உடன் ப்ரீ வெட்டிங்கில் கலந்து கொண்டார். அந்த போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகின.

ShahRukhKhanDeepikaPadukoneandRanveerSinghattendAnantAmbaniandRadhikaMerchantpre-weddingfestivities
ShahRukhKhanDeepikaPadukoneandRanveerSinghattendAnantAmbaniandRadhikaMerchantpre-weddingfestivities

தீபிகா, ரன்வீர்: தீபிகா மற்றும் ரன்வீர் கருப்பு மற்றும் வெள்ளை ஆடைகளை தேர்வு செய்து அணிந்து வந்திருந்தனர். தீபிகா படுகோன் கருப்பு நிற கவுனும், அவரது கணவர் ரன்வீர் சிங் வெள்ளை நிற பிளேசர் மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த ஜோடி கைகோர்த்து வந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

ShahRukhKhanDeepikaPadukoneandRanveerSinghattendAnantAmbaniandRadhikaMerchantpre-weddingfestivities

சைப் அலிகான்: பாலிவுட்டின் மற்றொரு ஜோடியான ரன்பீர் கபூர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்திருந்தார். இதில், சைஃப் அலி கான் கருப்பு நிற பிளேசரும், அவரது மகன் தைமூர் அலி கருப்பு நிற பிளேசரும் அணிந்து இருக்க, கரீனா கபூர் ஊதா நிற சேலை மற்றும் மேட்சிங் பிளவுஸில் காணப்பட்டார். அதே போல, அஜய் தேவ்கன், அக்‌ஷய் குமார் மற்றும் ஆலியா பட் என அனைவரும் கருப்பு நிற ஆடைகளை தேர்வு செய்து அணிந்து வந்தனர்.

ShahRukhKhanDeepikaPadukoneandRanveerSinghattendAnantAmbaniandRadhikaMerchantpre-weddingfestivities

களைகட்டிய விழா: இவர்கள் மட்டுமன்றி ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்களும் விரைவில் ஜாம்நகருக்கு வரவுள்ளனர். அந்த வரிசையில் கத்ரினா கைப், கரன் ஜோஹர், வருண் தவான், சித்தார்த் மல்ஹோத்ரா, கரிஷ்மா கபூர் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X