இதை யாரும் எதிர்பார்க்கல.. லால் சிங் சத்தா படத்திலும் ஷாருக்கான் கேமியோ.. டிரெண்டாகும் வீடியோ!

மும்பை: இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் 180 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது லால் சிங் சத்தா திரைப்படம்.

இன்று வெளியாகி உள்ள அந்த படத்திற்கு பாலிவுட்டில் எதிர்ப்புகள் வலுத்து வந்தாலும் படம் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களையே முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், லால் சிங் சத்தா படத்தில் ஷாருக்கானின் சர்ப்ரைஸ் கேமியோ ரோல் ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

வெளியானது லால் சிங் சத்தா

வெளியானது லால் சிங் சத்தா

இயக்குநர் அத்வைத் சந்தன் இயக்கத்தில் அதுல் குல்கர்னி திரைக்கதையில் உருவான அமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. ஹாலிவுட்டில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் இந்த படம். பாலிவுட்டில் தொடர்ந்து ரீமேக் கலாச்சாரம் வளர்ந்து வரும் நிலையில், ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்து நடித்துள்ளார் அமீர்கான்.

ஆதரவும் எதிர்ப்பும்

ஆதரவும் எதிர்ப்பும்

லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என பாய்காட் லால் சிங் சத்தா ஹாஷ்டேக் ஒரு பக்கம் டிரெண்டாகி வரும் நிலையில், GlobalLoveForLaalSingh மற்றும் BetterThanTheOriginal என இரு ஹாஷ்டேக்குகளை அமீர்கான் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஷாருக்கான் சர்ப்ரைஸ் கேமியோ

ஷாருக்கான் சர்ப்ரைஸ் கேமியோ

சல்மான் கான் படத்தில் ஷாருக்கானும், ஷாருக்கான் படத்தில் சல்மான் கானும் ஸ்பெஷல் கேமியோவாக வந்து சென்ற நிலையில், அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் ஷாருக்கான் ஸ்பெஷல் கேமியோவாக வந்ததை ரசிகர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பது முன்பே லீக்கானதை போல இதை லீக் ஆக்காமல் கடைசி வரை காப்பாற்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் அமீர்கான்.

சிறுவன் சத்தாவுடன் டான்ஸ்

சிறுவன் சத்தாவுடன் டான்ஸ்

ஃபாரஸ்ட் கம்ப் படத்தில் டாம் ஹேங்ஸின் சிறு வயது கதாபாத்திரம் வீட்டில் ஒரு நண்பர் கிட்டார் வாசிக்க ஆடுவான். அதே போன்றதொரு காட்சி லால் சிங் சத்தா படத்திலும் இடம்பெற்றுள்ளது. சிறுவன் லால் சிங் சத்தாவுடன் அந்த காட்சியில் ஷாருக்கானே ஆடியுள்ளது பாலிவுட் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

கையை பிடித்து இழுத்த நபர்..திரும்பிப் பார்த்து முறைத்த ஷாருக்கான்..
தொடரும் கேமியோ

தொடரும் கேமியோ

சினிமா உலகில் கேமியோ கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் வெளியான மாதவனின் ராக்கெட்டரி படத்தில் தமிழில் சூர்யா நடித்த கேமியோ கதாபாத்திரத்தில் இந்தியில் ஷாருக்கான் நடித்துக் கொடுத்து இருந்தார். இந்நிலையில், அடுத்ததாக லால் சிங் சத்தா படத்திலும் கேமியோவாக அசத்தி உள்ளார் ஷாருக்கான். நடிகர்கள் இப்படி கேமியோவாக நடிக்க பெரும்பாலும் காசு கூட வாங்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X