அவமானங்களை சந்திக்காமல் யாரும் ஜெயித்ததில்லை.. மேடையில் உருகிய ஷாருக்கான்!

சென்னை: பாலிவுட் சினிமாவில் டாப் கமர்சியல் ஹீரோவாக கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் ஷாருக்கான். பதான், ஜவான் படங்களின் ஹிட்டிற்குப் பிறகு உலகமே உற்றுநோக்கும் நடிகராக மாறி இருக்கிறார். தற்போது இவர் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து அவரது மகள் சுஹானா கான் முதன்முறையாக நடிக்கிறார். மேலும் அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே, அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்ஷத் வார்சி, ராணி முகர்ஜி உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரப் பட்டாளமே இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

நடிகர் ஷாருக்கான்: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஷாருக்கான் எமோஷனலாகப் பேசினார். அதில், என் வாழ்க்கையில் அவமானங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் சந்திக்காமல் யாரும் வெற்றியின் உச்சியை அடைந்ததில்லை. என்னுடைய ஆரம்பக் கால வாழ்க்கையிலும், ஏன் இப்போதும் கூட நான் பல அவமானங்களைச் சந்தித்துள்ளேன். அவற்றில் சில அவமானங்கள் இன்றும் ஆறாத காயங்களாகவே என் மனதில் அப்படியே இருக்கின்றன.

Shah Rukh Khan Bollywood
Photo Credit:

மனம் தளரக்கூடாது: ஆனால், நாம் சந்திக்கும் அந்த அவமானங்கள் தான் ஒரு நாள் நமக்கான வெற்றிக்கான வெகுமதியாக மாறும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலைகள் வந்தாலும் மனம் தளராமல் மீண்டும் எழுந்து ஓட வேண்டும். தேடலும் முயற்சியும் நம்மிடம் இருக்கும் வரை வெற்றியை நோக்கிய பயணமும் என்றும் தொடரும் என்று உருக்கமாகவும், இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் பேசினார். ஷாருக்கானின் இந்த ஆழமான பேச்சு தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டிங்கில் இருக்கிறது.

மிரளவைத்த ஷாருக்: ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக 'டன்கி' திரைப்படம் வெளியானது. பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், த்ரில்லர் காமெடி டிராமா திரைப்படமான இப்படம், உலகம் முழுவதிலும் சுமார் ₹120 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ₹470.6 கோடிக்கும் மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. 'டன்கி' படத்திற்கு முன் வெளியான 'பதான்' உலகளவில் ₹1,050.50 கோடியும், அட்லீ இயக்கத்தில் வெளியான 'ஜவான்'உலகளவில் ₹1,148.32 கோடியும் வசூல் செய்து இந்திய சினிமாவையே மிரள வைத்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X