Don't Miss!
- Technology
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- News
காரைக்குடி: பட்டா நிலத்தில் பெரியார் சிலை விவகாரம்: அதிகாரிகள் இடமாற்றத்துக்கு எச்.ராஜா கண்டனம்
- Automobiles
2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
உங்க பொண்ணு மட்டும் காவி பிகினி அணியலாமா? காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநரை விளாசும் நெட்டிசன்கள்!
மும்பை: ஷாருக்கானின் பதான் படத்தில் நடிகை தீபிகா படுகோன் காவி நிற பிகினி அணிந்து நடனமாடியதற்கு எதிராக ஒரு சிறுமியை வைத்து வீடியோ போட்டு சர்ச்சையை கிளப்பிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
விவேக் அக்னிஹோத்ரி முன்னதாக இயக்கிய ஹேட் ஸ்டோரி, ஸித் உள்ளிட்ட படங்களில் எல்லாம் ஆபாசம் கொட்டிக்கிடக்கிறதே என்றும் உங்க பொண்ணு மட்டும் அதே கலர் பிகினியோட பீச்சில் சுத்தலாமா? என கேட்டு துவைத்து எடுத்து வருகின்றனர்.
நெட்டிசன்களுடன் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து வாதம் செய்து வருகிறார் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி.
காவி பிகினி சர்ச்சை.. ஷாருக்கானின் உருவ பொம்மை எரிப்பு.. வெளியாகுமா பதான் திரைப்படம்?

விவேக் அக்னிஹோத்ரி
கடந்த 2005ம் ஆண்டு சாக்லேட் படத்தின் மூலமாக பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானவர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி. தொடர்ந்து கோல், ஹேட் ஸ்டோரி, ஸித், புத்தா இன் எ டிராபிக் ஜாம், தி தஷ்கென்ட் ஃபைல்ஸ் படங்களை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் மிகப்பெரிய கவனம் பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.

பிரிவினைவாதத்தை தூண்டுகிறார்
பாஜகவின் நட்பை பாராட்டி வரும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் அதிகளவில் கிளம்பியது. இந்து மற்றும் முஸ்லிம் மக்களிடையே பெரும் பிரிவினைவாதத்தை அவர் தூண்டுகிறார் என சர்ச்சைகளும் கிளம்பின.

பதான் பாடலுக்கு எதிர்ப்பு
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் பெஷாராம் ரங் பாடலில் நடிகை தீபிகா படுகோன் ஆரஞ்சு நிற பிகினியில் நடனம் ஆடியதை பார்த்து காவி நிற பிகினியில் ஆபாசமாக நடனமாடுகிறார் என எதிர்ப்பு தெரிவித்த விவேக் அக்னிஹோத்ரி, சிறுமி ஒருவரை வைத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் படியான வீடியோ ஒன்றை போட்டு சர்ச்சையை மேலும், பெரிதாக்கினார்.

உங்க பொண்ணும் தான்
விவேக் அக்னிஹோத்ரி அப்படியொரு வீடியோ போட்ட நிலையில், கடுப்பான ஷாருக்கான் ரசிகர்கள் விவேக் அக்னிஹோத்ரியின் மகள் மல்லிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த ஆரஞ்சு நிற பிகினி போட்டோவை எடுத்துப் போட்டு உங்க பொண்ணும் தான் காவி பிகினி அணிந்துள்ளார் என பதிலடி கொடுத்து வருகின்றனர். உடனடியாக தனது அக்கவுண்டையே பிரைவேட்டாக மாற்றிவிட்டார் விவேக் அக்னிஹோத்ரியின் மகள் மல்லிகா.

நீங்க எடுத்ததெல்லாம் காவியங்கள்
மேலும், கடந்த 2012ம் ஆண்டு விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய எரோட்டிக் த்ரில்லர் படமான ஹேட் ஸ்டோரி மற்றும் 2014ல் அவர் இயக்கத்தில் வெளியான Zid உள்ளிட்ட படங்கள் படு ஆபாசமாக உள்ளதே, நீங்க எடுத்ததெல்லாம் என்ன காவியங்களா என விவேக் அக்னிஹோத்ரியை வெளுத்து வாங்கி வருகின்றனர். மேலாடை கூட அணியாமல் நடிகைகள் அந்த படங்களில் அரை நிர்வாணமாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாக்கு வாதம்
விவேக் அக்னிஹோத்ரியின் மகள் பற்றியும் அவர் இயக்கிய பழைய படங்கள் பற்றியும் ஷாருக்கான் ரசிகர்கள் அக்குவேர் ஆணிவேராக எடுத்துப் போட்டு வறுத்தெடுத்தும் வரும் நிலையில், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ஈடுபட்டு வருகிறார். அடுத்து அவர் இயக்கத்தில் தி வாசின் வார் மற்றும் டெல்லி ஃபைல்ஸ் திரைப்படங்கள் உருவாகி வருகின்றன.