SCAMMER SALAAR CRUSHED: எல்லாமே பித்தலாட்டம்.. தியேட்டரில் ஒருத்தரும் இல்லை.. சலார் மோசடி அம்பலம்?
ஹைதராபாத்: தளபதி விஜய் நடித்த லியோ படத்துக்கும் இதே போல ஒரு பிரச்சனை வந்தது. தியேட்டரில் காத்து வாங்குது ஆனால், கூச்சமே இல்லாமல் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து விட்டது லியோ என்கின்றனர் என ரஜினிகாந்த் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், அதே போல பிரபாஸின் சலார் படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தான் ஓடுகிறது என்றும் அதை தாண்டி எங்கேயும் அந்த படம் ஓடவில்லை. ஆனால், தொடர்ந்து வசூல் வடை சுட்டு வருகின்றனர் என ஷாருக்கான் ரசிகர்கள் களத்தில் குதித்து சலார் மோசடி என ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
ஹீரோக்களுக்கு பில்டப் கொடுப்பது உலக அளவில் கமர்சியல் சினிமாக்களில் நடந்து வரும் ஒரு விஷயம் தான். ஆனால், வெறும் பில்டப்பை மட்டுமே பிரம்மாண்ட படமாக கொடுத்திருக்கிறார் கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் என்கிற விமர்சனம் எல்லா இடங்களிலும் சலார் படத்திற்கு கிடைத்துள்ளன. ஆனால், அந்தப் படத்தின் வசூல் இந்திய சினிமாவிலேயே முதல் நாள் 175 கோடி ரூபாய் என ஒரு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட படத்திற்கு கிடைத்திருப்பதாக தெரிவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

400 கோடிக்கு மேல் வாய் திறக்கல: பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என மொத்தம் மூன்று நாட்களில் 405 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. கிறிஸ்துமஸ் விடுமுறையுடன் சேர்த்து 500 கோடி வசூலை தாண்டி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தயாரிப்பு நிறுவனம், 405 கோடிக்கு மேல் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
சலார் வசூல் மோசடி: ஷாருக்கானின் டங்கி திரைப்படம் பிரபாஸ், பிரித்திவிராஜ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தை விட அதிக வசூல் அடைந்து இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் ஷாருக்கான் ரசிகர்கள் புக் மை ஷோ செயலியில் ஹவுஸ்ஃபுல் என காட்டுகிறது. ஆனால், அந்த நேரத்துக்கு தியேட்டருக்கு சென்று போய் பார்த்தால் ஒருத்தர் கூட இல்லை என வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு தற்போது சலார் படத்தின் வசூல் முழுக்கவே மோசடி என "SCAMMER SALAAR CRUSHED" எனும் ஹாஷ்டேக்கை டிரெண்டு செய்து வருகின்றனர்.
தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி: டாப் ஹீரோக்கள் தங்கள் படங்கள் தோல்வி என்பதை ஒத்துக் கொள்ளாமல் போலியான பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களை வெளியிட தயாரிப்பு நிறுவனங்களை டார்ச்சர் செய்து வருவதாக கூறுகின்றனர். துணிவு பட இயக்குநர் எச். வினோத் கூட போலியான பாக்ஸ் ஆபிஸ் நம்பர்கள் பற்றி எக்ஸ்போஸ் பண்ணியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாக்ஸ் ஆபிஸிலும் பில்டப்: படத்தில் மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸ் நம்பரிலும் சில முன்னணி நடிகர்கள் இப்படி பில்டப் பண்ணி ஏமாற்றி வருகின்றனர் என சர்ச்சைகள் வெடித்துள்ளன. ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் படங்களும் இதே போலத்தான் போலியான பாக்ஸ் ஆபிஸ் நம்பரில் ஓடியதா என பிரபாஸ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











