படக்குழுவினருக்கு கொரோனா...தன்னை தனிமைபடுத்திக் கொண்ட ஷாருக்கான்
மும்பை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருவதால் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புக்கள் நடத்தவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால், பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷாருக்கான் நடித்து வரும் பதான் படக்குழுவினர், பாதுகாப்பு நடவடிக்கையாக குழுவில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் ஒரு சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பதான் படத்தின் பெரும்பாலான பகுதிகள் துபாயில் படமாக்கப்பட்ட நிலையில், கடந்த ஒரு மாதமாக மும்பையில் படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் தகவலின்படி, படக்குழுவினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் ஷாருக்கான் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்து வருகிறார். பதான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க சிறிது காலம் ஆகும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் ஆகியோரும் நடித்து வந்தனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் திரைத்துறையை சேர்ந்த அனைத்து சங்கத்தினர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. யாருக்காவது அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தாங்களாகவே முன்வந்து சோதனை செய்து கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











