Shah Rukh Khan: சட்ட சிக்கலில் ஷாருக்கான் மகள்.. என்னம்மா இப்படி பொய் சொல்லிட்டயே!
மும்பை: நடிகர் ஷாரூக் கானுக்கு பிரச்னை வருகிறதோ இல்லையோ அவரது குழந்தைகள் மூலம் அவருக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு தலைவலி வந்து கொண்டுதான் உள்ளது. இம்முறை அவரது மகள் சுஹானா கான் மூலம் பிரச்னை வந்துள்ளது.
அதாவது ஷாரூக்கானின் மகள் சுஹானா கான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அலிபாக்கில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த இரண்டு ஏக்கர் நிலமும் விவசாயத்திற்கு மாநில அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து வாங்கப்படுள்ளது. இந்த நிலத்தை அவர் சுமார் ரூபாய் 20 கோடிகள் முதல் ரூபாய் 22 கோடிகள் வரை செலவு செய்து அந்த நிலத்தை வாங்கியுள்ளார். இங்கு என்ன பிரச்னை என்றால் அவர் விவசாய நிலத்தை வாங்கியது இல்லை, தன்னை ஒரு விவசாயி என்று ஆவணங்களில் குறிப்பிட்டு அந்த நிலத்தை வாங்கியுள்ளார். இது மட்டும் இல்லாமல் விவசாய நிலத்தில் விவசாயம் செய்யாமல், அங்கு பண்ணை வீடு கட்டியுள்ளார்.

பண்ணை வீடு: விவசாய நிலத்தில் பண்ணை வீடு கட்டியது தான் பிரச்னையே. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், அது தொடர்பாக முறையான விசாரணை நடத்தவும் வாய்மொழியாக உத்தரவிட பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஷாரூக்கானுக்கு அவரது மகன் மற்றும் மகளால் அடுத்தடுத்து பிரச்னைகள் வந்து கொண்டு உள்ளது.
பிரச்னை மேல் பிரச்னை: ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் அவரது மகன் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு உள்ளது என்று கைது செய்யப்பட்டார். இதனால் ஷாரூக்கான் பெரும் தலைவலியை எதிர்கொண்டார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021ஆம் ஆண்டு மும்பை-கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (NCB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

போதைப் பொருள் பயன்பாடு?: இந்த குற்றச்சாட்டில் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர், மேலும் 13 கிராம் கோகோயின், 21 கிராம் சரஸ், 22 எம்.டி.எம்.ஏ மாத்திரைகள் மற்றும் 5 கிராம் எம்.டி உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியது. ஆர்யன் மீது போதைப்பொருள் கொள்முதல், உடைமை மற்றும் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதன் பின்னர் நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் ஆர்யன் மீது குற்றம் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது ஷாரூக்கானின் மகள் சுஹானா கான் நிலம் வாங்கியது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளதால் இதுவும் ஷாரூக்கானுக்கு தலைவலியைக் கொடுத்துள்ளது என்று பலரும் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











