Shah Rukh Khan: பதான் பட்ஜெட் தான் ஷாருக்கான் சம்பளமே... பாலிவுட்டின் முதல் பவர் பேக் சம்பவம்!
மும்பை: ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான பதான் திரைப்படம் 1050 கோடிக்கும் மேல் வசூலித்தது.
இந்தப் படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோருடன் சல்மான் கானும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் 225 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கினார்.
இந்நிலையில், பதான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதான் படத்திற்காக ஷாருக்கான் வாங்கிய சம்பளம்
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் பதான். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தப் படம், ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியிருந்தது. பதான் என்ற சீக்ரெட் ஏஜெண்ட் கேரக்டரில் ஷாருக்கான் நடித்திருந்தார்.
ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோன், வில்லன் கேரக்டரில் ஜான் ஆப்ரஹாம், கேமியோ ரோலில் சல்மான் கான் என பிரம்மாண்டமான கூட்டணியில் வெளியான பதான், பாக்ஸ் ஆபிஸில் 1050 கோடிக்கும் மேல் வசூலித்தது. முக்கியமாக இந்தப் படத்தில் பேஸ்ராங் என்ற பாடலில் தீபிகா காவி பிகினி அணிந்திருந்ததால் பாய்காட் பதான் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

ஆனால், பாய்காட் பிரச்சாரங்களை முறியடித்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது பதான். பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தை யாஷ்ராஜ் பிலிம்ஸ் 225 கோடி ரூபாய் பஜெட்டில் தயாரித்துள்ளது. இதுதவிர ஷாருக்கான் சம்பளம் மட்டுமே 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஷாருக்கான் கேரியரில் பதான் படத்திற்கு தான் 200 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஷாருக்கான், முதன்முறையாக 200 கோடி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் சம்பளம் குறித்த தகவல் பாலிவுட் திரை பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான், அமீர்கான் மூவரும் தான் பல கோடிகளை சம்பளமாக வாங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், Tiger Vs Pathaan டைட்டிலில் ஷாருக்கான், சல்மான் கான் இணைந்து நடிக்கும் படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ். இந்தப் படத்தையும் சித்தார்த் ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரு படத்தில் சேர்ந்து நடிப்பது பாலிவுட்டையே பதற வைத்துள்ளது. யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 7வது ஸ்பை த்ரில்லர் படமாக இது உருவாகும் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











