வீட்டுக்குள்ளிருந்து பேய்படம்..வருங்கால இயக்குனர்களுக்கு போட்டி வைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
மும்பை: இயக்குனர் ஆக விரும்புவர்களுக்கு பிரபல ஹீரோ ஷாருக் கான் திடீரென போட்டி ஒன்றை வைத்துள்ளார்.
லாக்டவுன் காரணமாக பல நாடுகள் லாக்டவுனில் இருக்கிறது. பொதுமக்கள் வீடுகளுக்கு அடைந்து கிடக்கின்றனர்.
பலர், இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக எதையாவது கற்று வருகிறார்கள். நடிகர், நடிகைகளும் நடிப்பு, இசை, ஓவியம் என கற்று வருகிறார்கள்.

ரெட்சில்லீஸ்
இந்நிலையில் இயக்குனராகும் ஆசையில் இருப்பவர்களுக்கு நடிகர் ஷாருக் கான் போட்டி ஒன்றை வைத்துள்ளார். அதாவது நடிகர் ஷாருக் கான், தனது பட தயாரிப்பு நிறுவனமான ரெட்சில்லீஸ் சார்பாக, பேடால் (Betaal) என்ற வெப்சீரிஸை நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்காகத் தயாரித்துள்ளார். ஹாரார் த்ரில்லர் தொடரான இதன் டிரைலர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம்
இதில் வினீத் குமார், அஹானா கும்ரா, சுசித்ரா பிள்ளை, ஜிதேந்திரா ஜோஷி, மஞ்சரி புபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 24ஆம் தேதி முதல் வெளியாகவுள்ளது. இதை விளம்பரப்படுத்தும் விதமாக, இயக்குனராகும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு போட்டி வைத்துள்ளார் நடிகர் ஷாருக் கான். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறியிருப்பதாவது:

பயமுறுத்தும் விதமாக
இந்த குவாரன்டைன் நேரத்தில் அனைவருக்கும் சிறிது நேரம் கிடைத்திருப்பதால், கொஞ்சம் ஜாலியாக, ஆக்கப்பூர்வமாக, கொஞ்சம் பயமுறுத்தும் விதமாக வேலை செய்யலாம் என நினைத்தேன். நிறைய படங்கள் பார்த்திருப்போம். நம்முள் இருக்கும் இயக்குனரை பேய்ப் படம் எடுக்கவைத்தால் எப்படி இருக்கும்? மற்ற விவரங்களுக்கு படியுங்கள் என்று கூறியுள்ளார். அதில் சில விதிகளையும் வகுத்திருக்கிறார் ஷாருக்.

சமூக விலகல்
வீட்டுக்குள் இருந்து எடுக்கப்படும் படமாக அது இருக்க வேண்டும். நீங்கள் எந்த கேமராவையும் பயன்படுத்தலாம். பயமுறுத்துவதற்காக நீங்கள் எந்த பொருளையும் பயன்படுத்தலாம். அந்த பொருள் வீட்டில் இருக்கவேண்டும். வீட்டில் உள்ள எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஆனால் சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்தப் பேய்படத்தை மே 18-ஆம் தேதிக்குள் [email protected] என்ற மெயிலுக்கு அனுப்ப வேண்டும்.
Recommended Video

பேய்கள் எடுத்த படம்
சிறந்த படத்தை பேட்ரிக் கிரஹாம், வினீத் குமார், அஹானா , கவுரவ் வர்மா ஆகியோர் அடங்கிய தேர்வு செய்யும். தேர்வு செய்யப்படும் 3 பேருடன் வீடியோ காலில் ஷாருக்கானும் இவர்களும் பேசுவார்கள். (பின்குறிப்பு: பேய்கள் எடுத்த படங்களும் வரவேற்கப்படுகின்றன) என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











