Shah Rukh Khan Health Update: ஷாரூக் கானுக்கு காயம் ஏற்படவேயில்லை.. அமெரிக்காவுக்கு போக காரணமே வேற!

மும்பை பாலிவுட்ய் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நலமாக இருக்கிறாரா என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஷாரூக் கான் தற்போது "கிங்" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது காயம் அடைந்ததாக செய்திகள் வந்தன. இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த காயம் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்டதாகவும், உடனே அவர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இந்தியா டுடே உறுதிப்படுத்தியது. தற்போது அவர் இங்கிலாந்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த காயம் சிறியதுதான் என்றும், அவர் நலமாக தேறி வருகிறார் என்றும் பல்வேறு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உண்மையில் இது உண்மையா? ஷாருக் கானுக்கு "கிங்" படத்தின் படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டது என்பது உண்மையா என்பது குறித்து வேறு கோணத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது

ஷாருக் கான் "கிங்" படப்பிடிப்பில் காயமடைந்ததாக நேற்று பல்வேறு செய்திகள் வெளியாகின. அந்த செய்திகளின்படி, ஷாரூக்கானுக்கு ஏற்பட்ட காயம் பெரிய காயம் இல்லை. ஆனால் இது அவரது கிங் படத்தின் படப்பிடிப்பை தாமத்தப்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. "கிங்" திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 2025 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஷாருக் கானுக்கு காயம் ஏற்பட்டது என்ற வதந்திகள் உண்மையில்லை என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

Shah Rukh Khan Health Update He Really Injured During King Film Shoot Latest Updates
Photo Credit:

காரணம் வேறு: ஷாருக் கானுக்கு "கிங்" படப்பிடிப்பில் முதுகு காயம் ஏற்பட்டது "உண்மையல்ல" என்று படக்குழுவுக்கு நெருங்கிய்அ வட்டாரம் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த வட்டாரம் மேலும் கூறுகையில், "ஷாருக் கான் கடந்த காலங்களில் பல்வேறு படப்பிடிப்புகளின்போது காயமடைந்துள்ளார். சில சமயங்களில் அவை மீண்டும் அவருக்கு பிரச்னைகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றன. சிகிச்சை மற்றும் ஏற்கனவே ஏற்பட்ட காயத்தின் நிலையை அறிந்து கொள்ள அவர் அடிக்கடி அமெரிக்காவுக்கு செல்கிறார்" எனக் கூறியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் ஷாரூக் கான் அமெரிக்காவிலிருந்து திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூக்கில் காயம்: இதற்கு முன்னதாக கூட ஒருமுறை, ஷாருக் கான் படப்பிடிப்பின்போது மூக்கில் காயம் அடைந்ததாகவும் வதந்திகள் பரவின. இருப்பினும், அவர் மூக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார், காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரம் அந்த வதந்திக்கும் மறுப்பு தெரிவித்தது.

Shah Rukh Khan Health Update He Really Injured During King Film Shoot Latest Updates
Photo Credit:

கிங் பட கதை: ஷாருக் கானின் அடுத்த படமான "கிங்" திரைப்படம் 2026 ஆம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐஎம்டிபியின் அதிகாரப்பூர்வ கதைச் சுருக்கத்தின் படி கிங் படத்தில், "குருவும், சீடரும் ஒரு ஆபத்தான பயணத்தை மேற்கொள்கிறார்கள். அவர்கள் உயிர் பிழைக்கும் திறன்களை அதிகபட்சமாக பயன்படுத்தி, அதிகப்படியான தடைகளையும், சில கடினமான சூழல்களையும் எதிர்த்து போராடுகிறார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். ஷாருக் கானுடன், தீபிகா படுகோன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X