அட்லீ இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜவான்… ஆயிரம் கோடியில் ப்ளான் போடும் ஷாருக்கான்

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் சூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகிறது.

ஜவான் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார்.

ஷாருக்கானின் பதான்

ஷாருக்கானின் பதான்

ஷாருக்கானின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் ஆகின்றன. இறுதியாக 2018ல் ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜீரோ' திரைப்படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து மெகா ஹிட் கொடுக்க காத்திருக்கும் ஷாருக்கான், அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகவிருக்கும் 'பதான்' திரைப்படத்தை அதிகமாக நம்பியிருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம் ஆகியோரும் நடிக்கின்றனர். முக்கியமாக சல்மான் கான் ஒரு கேமியோ ரோலில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

எதிர்பார்ப்பில் ஜவான்

எதிர்பார்ப்பில் ஜவான்

இதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படம், மிகப் பிரம்மாணடமாக உருவாகி வருகிறது. ஷாருக்கானுடன் நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் விஜய்யும் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார். முக்கியமாக ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஜவான் படத்தின் ஷூட்டிங் மும்பையில் வேகமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், மழை காரணமாக மும்பையில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டது. ஜவான் படத்திற்காக சென்னையில் மிகப் பெரிய செட் போடப்பட்டுள்ளதால், பாதி ஷூட்டிங் இங்குதான் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

ஜவானை வாங்கிய நெட்பிளிக்ஸ்

ஜவானை வாங்கிய நெட்பிளிக்ஸ்

ஜவான் அடுத்தாண்டு ஜூன் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக ஜவான் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், படப்பிடிப்பை அட்லீ வேகமாக நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜவான் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மிகப் பெரிய தொகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரம் கோடிக்கு பிஸினஸ்

ஆயிரம் கோடிக்கு பிஸினஸ்

ஜவான் திரைப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. அதனால், இந்தப் படத்தின் பிஸினஸ் தரமாக இருக்க வேண்டும் என ஷாருக்கான் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, ஜாவன் படத்தை ஆயிரம் கோடிக்கு வியாபாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். ஷாருக்கானின் இந்த ப்ளான், பாலிவுட் திரையுலகையே தலை சுற்ற வைத்துள்ளது. இந்தப் படத்தை முடித்த கையோடு அடுத்தடுத்து இன்னும் இரண்டு மெகா பட்ஜெட் படங்களில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகவும், அதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X