லியோ இல்லாமல் ஷாருக்கானின் ஜவானா?.. குவிந்த கூட்டம்.. ஷாருக்கானின் சூப்பர் என்ட்ரி!
சென்னை: சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்கு பிறகு மீண்டும் ஷாருக்கானுக்கு மிகப்பெரிய அளவில் சென்னை கனெக்ட்டை ஜவான் படம் கொடுத்திருக்கிறது. பாலிவுட் படம் என்றாலும், அட்லீ இயக்கத்தில் உருவாகி உள்ள ஜவான் படத்தின் முதல் நிகழ்ச்சியே சென்னையில் இன்று நடைபெறுவது வேறலெவல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று மதியம் சென்னையில் நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெறும் இந்த விழாவுக்கு வருகை தர ஷாருக்கான் சென்னை விமான நிலையத்திற்கு வரும் போதே ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நயன்தாரா இந்த புரமோஷனில் அட்லீக்காக பங்கேற்பாரா? என்கிற கேள்வியும் நடிகர் விஜய் வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
லியோ முத்து ஸ்டேடியம்: ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் வர வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது. ஆனாலும், லியோ முத்து ஸ்டேடியத்தில் தான் ஜவான் நிகழ்ச்சியே நடைபெறுவது இருவருக்கும் இடையேயான கனெக்ட்டையே குறிப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஷாருக்கானை காண குவிந்த ரசிகர்கள்: இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் நடிகர் ஷாருக்கான் ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்துள்ள நிலையில், அவரை காண ஏகப்பட்ட கூட்டம் சாய்ராம் கல்லூரியை நோக்கி படையெடுத்து வருகிறது.
ரசிகர்களை பார்த்ததுமே ஷாருக்கான் கையசைத்து வணக்கம் தெரிவித்த லேட்டஸ்ட் வீடியோ டிரெண்டாகி வருகிறது.
விஜய் வர வாய்ப்பு இல்லை: நடிகர் விஜய் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஜய் வருவார் என்பதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை என்கின்றனர். இதனால், ஷாருக்கான் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.
நடிகை நயன்தாரா இந்த புரமோஷன் நிகழ்ச்சியிலாவது கலந்து கொள்வாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ராக்ஸ்டார் அனிருத், விஜய்சேதுபதி, சானியா மல்கோத்ரா, யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











